Who is that Vasishta? | Adi Parva - Section 176 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் மகிமையைச் சொன்ன கந்தர்வன்...
வைசம்பாயனர் சொன்னார், கந்தர்வனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும் பாரதக் குலத்தில் சிறந்தவனுமான அர்ஜுனன், முழு மதியைப் போல அர்ப்பணிப்பால் நிறைந்து நின்றான்.(1) குருக்களில் சிறந்தவனா அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்}, வசிஷ்டரின் ஆன்ம பலத்தைக் கேட்டு ஆவலால் தூண்டப்பட்டு அந்தக் கந்தர்வனிடம் இவ்வாறு பேசினான்,(2) "வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வாயாக.(3) ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்குப் புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்" என்று கேட்டான்.(4)