The Pandavas went to Dwaitavana | Vana Parva - Section 24 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்கள் தங்கள் பனிரெண்டு வருட வனவாசத்தைக் கழிக்க துவைத வனத்தை அடைதல்...
வைசம்பாயனர் சொன்னார், "அவர்கள் எல்லாம் சென்ற பிறகு, குந்தியின் உறுதி குலையாத அறம்சார்ந்த மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளிடம், "நாம் இந்தத் தனிமையான வனத்தில் பனிரெண்டு வருடங்கள் வசிக்க வேண்டும்.ஆகையால், இந்தப் பெரும் வனத்தில், காண்பதற்கினிய பறவைகளும், மான்களும், மலர்களும், கனிகளும் இருக்கும் இடத்தைத் தேடுங்கள். இந்த வருடங்கள் முழுவதையும் அறம்சார்ந்த மனிதர்கள் வசிக்கும் அதிர்ஷ்டகரமான இடத்தில் இனிமையாக வசிக்கலாம்!" என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} குருவை வணங்குவது போல வணங்கி அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மறுமொழி கூற ஆரம்பித்தான். "அனைத்து பழம்பெரும் ரிஷிகளிடமும் நீர் மரியாதையுடன் காத்திருந்திருக்கிறீர். இந்த மனிதர்களின் உலகில் நீர் அறியாத ஒன்றும் கிடையாது. ஓ பாரத குலத்தின் காளையே, எப்போதும் நீர் துவைபாயனர்{வியாசர்} உள்ளிட்ட அந்தணர்களிடமும் மற்றவர்களிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கீறர்.
பெரும் ஆன்மத் தகுதி படைத்து, புலன்களைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து எல்லா உலகங்களின் வாசலுக்கும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களுக்கும், தேவர்களின் உலகத்திலிருந்து பிரம்மலோகத்திற்கும், செல்லும் சக்தி படைத்த நாரதரிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கின்றீர். அந்தணர்களின் கருத்துகளையும், அவர்களது வீரத்தையும் சந்தேகமற நீர் அறிந்து வைத்திருக்கின்றீர்! ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நமக்கான நன்மைகளை அடைவதையும் அறிவீர்! ஓ பெரும் மன்னா, நீர் எப்படி விரும்புகிறீரோ அப்படியே நாங்கள் வாழ்வோம்! இதோ இந்த தடாகம் முழுவதும் புனித நீர் இருக்கின்றது. மலர்கள் நிறைந்து, காண்பதற்கினியதாகவும், பல்வேறு வகையான பறவைகள் உள்ளதாகவும் இந்தத் துவைத வனம் இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு விருப்பம் இருந்தால், பனிரெண்டு வருடங்களும் {12} நாம் இங்கேயே வசிக்கலாம்! இல்லையென்றால்?" என்ற கேள்வியோடு நிறுத்தினான் அர்ஜுனன். அதற்கு மறுமொழியாக யுதிஷ்டிரன், "ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ ஒன்றைப் பரிந்துரைக்கிறாய் என்பதே அதன் தன்மையை எனக்கு விளக்குகிறது! நாம் அந்தப் புனிதமான, கொண்டாடப்படும் துவைதவனம் என்று அழைக்கப்படும் தடாகத்திற்குச் செல்வோம்." என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு பாண்டுவின் அறம்சார்ந்த மகன் {யுதிஷ்டிரன்} எண்ணற்ற அந்தணர்களுடன், துவைதவனம் என்று அழைக்கப்படும் அந்த புனிதமான தடாகத்திற்குச் சென்றான். நெருப்பு வேள்வி செய்யும அந்தணர்களும், அப்படி இல்லாதவர்களும், பிச்சை எடுத்து வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து இருந்தனர். கடும் நோன்பு நோற்று தவ வெற்றி கண்ட நூற்றுக்கணக்கான மகாத்மாக்களால் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} சூழப்பட்டு இருந்தான். பாண்டுவின் மகன்களாகிய அந்த பாரத குலத்தின் காளைகள் எண்ணற்ற அந்தணர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமான புனித வனமான துவைத வனத்திற்குள் நுழைந்தனர். வசந்த காலத்தின் நெருக்கத்தில் அந்தப் பெரும் வனம் {துவைத வனம்}, சால மரம், பனை, மா, மாதுகம் {இலுப்பை}, நிபம் {அடம்பு}, கதம்பம் {கடம்பு}, சர்சம், அர்ஜுனம் {மருத மரம்}, கார்னிகரம் {கோங்கு}, ஆகிய பூக்களுடன் கூடிய மரங்களுடன் இருந்தது. அந்த வனத்தில் மயில்களும், தத்யுஹங்களும் {நீர்க்கோழிகளும்}, சக்கோரங்களும் {புராண காலத்துப் பறவை}, வார்ஹின்களும்{புராண காலத்துப் பறவை}, கோகிலங்களுமான {குயில்களுமான} பறவைகளின் கூட்டங்கள் மரங்களின் உச்சியில் இருந்து மகிழ்விக்கும் குரலுடன் கூவிக் கொண்டிருந்தன. அதிக மதம் கொண்ட பெரும் மலை போன்ற யானைகள், பெண்யானைகளுடன் கூட்டமாக இருப்பதை அங்கே மன்னன் கண்டான்.
அழகான போகவதியை {சரஸ்வதி நதியை} அணுகிய மன்னன், அங்கே ஆன்ம வெற்றி அடைந்த பல தவசிகளும், தலையில் ஜடாமுடியுடன், மரவுரி அணிந்து தூய ஆன்மா கொண்ட அறம் சார்ந்த மனிதர்களும் அந்தக் காட்டில் வசிப்பதைக் கண்டான். அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான மன்னனும் {யுதிஷ்டிரனும்}, அவனது தம்பிகளும், தொடர்ந்து வந்தவர்களும், தாங்கள் வந்த தேர்களில் இருந்து இறங்கி, அளவற்ற சக்தி கொண்ட இந்திரன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல அந்த வனத்திற்குள் நுழைந்தனர். உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஏகாதிபதியைக் காண விரும்பி சாரணர்களும் சித்தர்களும் பெருங்கூட்டமாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்தனர். பெரும் புத்திகூர்மை கொண்டவனும், மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனுமானவனைகச் {யுதிஷ்டிரனை} சுற்றி அந்தக் கானகவாசிகள் நின்றனர். சித்தர்களை வணங்கியும், மன்னனுக்குரிய அல்லது தேவர்களுக்குரிய மதிப்புடன் அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன், அந்த அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களுடனும் கூப்பிய கரங்களுடனும் அந்தக் கானகத்திற்குள் நுழைந்தான். தன்னை நாடி வந்த அறம் சார்ந்த தவசிகளை வணங்கியும் அவர்களால் வணங்கப்பட்டும் இருந்த அந்த மன்னன், மலர்கள் நிறைந்த ஒரு பெரும் மரத்தினடியில் பழங்காலத்தில் தனது தந்தை அமர்ந்தது போல அமர்ந்தான். பாரத குலத்தின் தலைவர்களான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டையர்கள், கிருஷ்ணை {திரௌபதி}, மற்றும் அவர்களைத் தொடர்ந்தவர்கள் அனைவரும் மிகுந்த களைப்படைந்து, தங்கள் வாகனங்களை விட்டு, மன்னர்களில் சிறந்தவனைச் {யுதிஷ்டிரனைச்} சுற்றி அமர்ந்து கொண்டனர். அந்த ஐந்து சிறந்த வில்லாளிகள் கொடிகளின் எடை தாங்காமல் வளைந்து நின்ற அந்தப் பெரும் மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தபோது, ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் (ஐந்து) பெரும் யானைகளுடன் கூடிய மலை போல அந்த மரம் தெரிந்தது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.