Markandeya's sermon | Vana Parva - Section 24 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்களின் விருந்தாளியாக வந்த முனிவர் மார்க்கண்டேயர் சில உபதேசங்களைச் செய்வது;
வைசம்பாயனர் சொன்னார், "துன்பத்தில் வீழ்ந்திருந்த அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} கடைசியாக அந்தக் கானகத்தில் ஒரு இனிமையான வசிப்பிடத்தை அடைந்தனர். சரஸ்வதி நதியால் சுத்தப்படுத்தப்பட்ட சால மரங்கள் நிறைந்த அந்த வனத்தில், இந்திரர்களைப் போன்ற அவர்கள் விளையாடத் தொடங்கினர். அந்தச் சிறப்புமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தக் குரு குலத்தின் காளை, அக்கானகத்தில் இருந்த யதிகளையும், முனிவர்களையும், முக்கியமான அந்தணர்களையும், அற்புதமான பழங்கள் மற்றும் கிழங்குகள் கொடுத்து திருப்தி செய்தான்.
பெரும் சக்தி படைத்தவரும், அந்த இளவரசர்களுக்குத் தந்தை போன்றவரும், அவர்களது புரோகிதருமான தௌமியர் அந்தப் பெரும் கானகத்தில் வசிக்கப்போகும் பாண்டவர்களுக்காக இஷ்டி மற்றும் பைத்ரேயம் என்ற வேள்விச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார். தங்கள் நாட்டைத் தொலைத்து, கானகத்தில் வாழும் பாண்டவர்களின் வசிப்பிடத்திற்கு விருந்தாளியாக முதிர்ந்தவரான ஆழ்ந்த அளவற்ற ஆற்றல் பெற்ற முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்.
குரு குலத்தின் காளையும் உயர்ந்த ஆன்மா கொண்டவனும், ஒப்பற்ற பலமும் சக்தியும் கொண்டவனுமான யுதிஷ்டிரன், தேவர்களாலும், மனிதர்களில் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குச் சமமான பிரகாசத்துடன் இருந்த அந்தப் பெரும் முனிவருக்குத் {மார்க்கண்டேயருக்கு} தனது வணக்கத்தைத் தெரிவித்தான். அனைத்தையும் அறிந்த ஒப்பற்ற சக்தி கொண்ட அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், திரௌபதி, யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை தவசிகளுக்கு மத்தியில் கண்டு புன்னகைத்து, மனதில் இராமனைக் குறித்து நினைத்துப் பார்த்தார். இதனால் வெளிப்படையாக வருத்தமுற்ற நீதிமானான யுதிஷ்டிரன் அவரிடம், "இந்தத் தவசிகள் அனைவரும் நான் இங்கிருப்பதைக் கண்டு வருத்தமுறுகின்றனர். ஆனால் நீர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போல இவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறீரே! ஏன்?" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் மறுமொழியாக, "ஓ குழந்தாய்! நானும் வருந்துகிறேன். நான் மகிழ்ச்சியால் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியினால் உண்டாகும் கர்வமும் எனது இதயத்துக்குக் கிடையாது! இன்று இந்தப் பேரிடரைக் கண்ட நான், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த தசரத மைந்தன் ராமனை நினைத்துப் பார்க்கிறேன்! அந்த ராமன் கூட தந்தையின் கட்டளைக்கிணங்க லட்சுமணனுடன் கானகத்தில் வசித்தான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் வில்லுடன் ரிஷ்யமுக மலைகளில் அலைந்து திரிந்த அவனை {ராமனை} நான் கண்டிருக்கிறேன். அந்தச் சிறப்பு மிகுந்த ராமன், நமுச்சியைக் கொன்றவனும் யமனுக்குத் தலைவனுமான இந்திரனைப் போன்றவன். இருப்பினும் அந்தப் பாவமற்றவன் கூட {ராமனும் கூட} தந்தையின் {தசரதனின்} கட்டளையை தன் கடமையாக ஏற்று, கானகத்தில் வசிக்க வேண்டியிருந்தது. சிறப்பு மிகுந்த ராமன் பராக்கிரமத்தில் சக்ரனுக்குச் {இந்திரனுக்குச்} சமமானவன். போர்க்களத்தில் ஒப்பற்றவன். இருப்பினும் அவன் {ராமன்} அனைத்து இன்பங்களையும் துறந்து கானகத்தில் திரிய வேண்டியிருந்தது. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
மன்னர்களான நாபாகனும், பகீரதனும், மற்றவர்களும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை உண்மையால் {சத்தியத்தால்} வெற்றிகொண்டு, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா, (கடைசியாக) அதன்பிறகு அனைத்து உலகங்களையும் அடைந்தார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மனிதர்களில் மேன்மையானவனே, அறமும் உண்மையும் கொண்ட காசி மன்னனும், கருஷனும் தனது நாட்டையும், செல்வங்களையும் துறந்தபோது பைத்தியக்கார நாய் என்று அழைக்கப்பட்டார்கள் { king of Kasi and Karusha was called a mad dog for having renounced his territories and riches!}. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, படைப்பாளரால் {பிரம்மனால்} வேதங்களில் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, நீதி தவறாத ஏழு முனிவர்கள் வானத்தில் சுடர்விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தந்தங்களுடன் கூடிய மலைமுகடுகளைப் போன்ற பெரும் யானைகளைப் பார். ஓ மனிதர்களில் மேன்மையானவனே அவர் படைப்பாளரின் {பிரம்மனின்} விதிகளை மீறுவதில்லை. ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து உயிர்களும் தங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப படைப்பாளரின் விதிப்படி நடப்பதைப் பார். ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, உண்மையில், அறத்தில், நன்னடத்தையில், அடக்கத்தில், நீ அனைத்து உயிர்களிலும் விஞ்சி நிற்கிறாய். உனது புகழும், சக்தியும், நெருப்பையோ அல்லது சூரியனையோ போல பிரகாசமாக இருக்கின்றன. உனது சத்தியங்களில் உறுதியாக இருக்கும், ஓ சிறப்பானவனே, வலி நிறைந்த வனவாசத்தைக் கழித்து, ஓ மன்னா, உனது சக்தியால், நீ மீண்டும், கௌரவர்களிடம் இருந்து வளமையைப் பறிப்பாய்!" என்றார் {மார்க்கண்டேயர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நண்பர்களுக்கும் தவசிகளுக்கும் மத்தியில் (அமர்ந்து) இருந்த யுதிஷ்டிரனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் முனிவர் {மார்க்கண்டேயர்}, தௌமியரையும், பாண்டவர்களையும் வணங்கிய பிறகு வடக்கு திசை நோக்கிச் சென்றார்!"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.