இந்தப் பகுதியில் சந்தனு சத்தியவதி காதலும், சத்தியவதி எப்படி ஆட்சியைத் தனது கைகளில் வைத்திருந்தாள் என்பதும் சொல்லப்படுகிறது.
*********************************************************************************
பொற்கதவம்-2 | முதற்கனல்-7 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- சாபம் விலகிய மீன் | ஆதிபர்வம் - பகுதி 63ஆ - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63b.html
- பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html
- சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101- http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.html
*********************************************************************************
சந்தனு சத்தியவதி காதலை அழகாக சொல்லியிருக்கிறார். நாமே அந்த சந்தனுவாக உணரும் படி இருக்கிறது இந்தப் பதிவு.
சந்தனு தானே சத்தியவதியை அடைந்தான் என்று சொல்வதால், பீஷ்மனின் சபதத்திற்கு அவசியம் இல்லாமல் போகிறது. ஒரு வேளை பிளாஷ்பேக்காக பின்னால் வரக்கூடும் என்று நினைக்கிறேன். பீஷ்மனின் சபதமே மஹாபாரதத்திற்கு முதுகெலும்பு. சரி சபதம் இல்லையென்றாலும், பீஷ்மன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாவது சொல்ல வேண்டியிருக்கும்.
உபரிசரன் {வசுவின்} கதை இருந்தால், பாண்டவர்களுடன் சேதி நாட்டுக்கு இருந்த தொடர்பின் ஆழம் வாசகர்களுக்குப் புரியும். இந்தப் பதிவில் தசராஜனே சத்தியவதியின் தகப்பன் என்பது நிறுவப்படுவதால், {மகாபாரதக் கதையின் படி அவன் வளர்ப்பு தந்தைதான்} அதை வாசகர்கள் உணராமல் போகக்கூடும்.
ஓவியம் அருமை. இதுவரை மனிதர்களின் முதுக்குக்குப் பின்னால், தூரத்து நிழல் உருவம் என்றே படங்கள் வந்திருக்கின்றன. குளோஸ்-அப் ஓவியங்களையும் எதிர்பார்க்கிறது மனம்.
உபரிசரன் {வசுவின்} கதை இருந்தால், பாண்டவர்களுடன் சேதி நாட்டுக்கு இருந்த தொடர்பின் ஆழம் வாசகர்களுக்குப் புரியும். இந்தப் பதிவில் தசராஜனே சத்தியவதியின் தகப்பன் என்பது நிறுவப்படுவதால், {மகாபாரதக் கதையின் படி அவன் வளர்ப்பு தந்தைதான்} அதை வாசகர்கள் உணராமல் போகக்கூடும்.
ஓவியம் அருமை. இதுவரை மனிதர்களின் முதுக்குக்குப் பின்னால், தூரத்து நிழல் உருவம் என்றே படங்கள் வந்திருக்கின்றன. குளோஸ்-அப் ஓவியங்களையும் எதிர்பார்க்கிறது மனம்.
இந்தப் பதிவில் நான் ரசித்த வரிகள்...
* “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.
* அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான்.
* நிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள்.
* நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார்.
* நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.
* செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்கு எழுந்தன.
* அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது
* பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்.
* ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது.
* சந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.