http://www.jeyamohan.in/?p=44003
http://venmurasu.in/2014/01/08/ நூல்-ஒன்று-முதற்கனல்-8/
இந்தப் பகுதி பீஷ்மர் அறிமுகம், பராசரர் அறிமுகம், வியாசர் அறிமுகம் என பல பகுதிகளைத் தொடுகிறது...
*********************************************************************************
பொற்கதவம்-3 | முதற்கனல்-8 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி | ஆதிபர்வம் - பகுதி 63இ - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63c.html
- பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html
- காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html
- சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை | ஆதிபர்வம் - பகுதி 103 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section103.html
- சத்தியவதி சொன்ன இரகசியம் | ஆதிபர்வம் - பகுதி 105 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section105.html
- பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை - ஆதிபர்வம் பகுதி 180 - http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section180.html
- வசிஷ்டர் வரும் பகுதிகளான - ஆதி பர்வம் 175 முதல் 184 வரை படித்துவிடவும் -http://mahabharatham.arasan.info/search/label/வசிஷ்டர்
*********************************************************************************
நமது கருத்து:
//இன்று காலை பேரமைச்சர் இதைக்கொண்டுவந்து என்னிடம் அளித்தார். பலபத்ரரின் ஒற்றன் நாகரதேசத்துக்குச் சென்ற ஒரு தூதனைக் கொன்று இதை கைப்பற்றியிருக்கிறான்.// என்று சத்தியவதி சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. தூதர்களைக் கொல்வது அக்கால வழக்கப்படு பெரும் பாவமாகும். "தூதனாக வந்ததால் பிழைத்தாய்" என்று மகாபாரதத்தில் பல இடங்களில் வரும்.
காசிமன்னன் சுயம்வரத்திற்கு அஸ்தினாபுரத்திற்கு அழைப்புக் கொடுக்காமல் நடத்த எண்ணினான் என்ற மகாபாரதச் செய்தியை வைத்துக் கொண்டு சத்தியவதி பீஷ்மரிடம் ஓலைகள் காட்டும் காட்சியை அழகாகப் புனைந்திருக்கிறார் திரு.ஜெயமோகன்.
காசி மன்னன் பெயர்க்குறிப்பு முழு மஹாபாரதத்தில் இல்லை // “காசிமன்னன் பீமதேவன் அவனுடைய மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.//
பீஷ்மரை கூர்ந்து நோக்கி சத்யவதி சொன்னாள். “அந்த விழாவுக்கு நம்மைத்தவிர பாரதநாட்டில் உள்ள அத்தனை அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறான் பீமதேவன்…நம்மை அவமானப்படுத்துவதற்காகவே இதைச் செய்திருக்கிறான். நாம் அவனிடம் பெண்கேட்டதற்காகவே இதைச்செய்கிறான்…”
// அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்”// அருமையான வைர வரிகள்.
மகாபாரதத்தில் வரும் கல்மாஷபாதனைத்தான் கிங்கரன் என்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்தப் பதிவில் நான் ரசித்த வரிகள்
* ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்.
* ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார்.
* அக்கதைகளைக் கேட்கும் எவரும் அஸ்தினபுரியின் அரசனை மாயத்தால் கைப்பற்றிய தீயதேவதை என்றுதான் என்னைப்பற்றி எண்ணுவார்கள்.
* ஆயர்குடிகளும் வேளாண்குடிகளும் கடலவர்களும் எதை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நான் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
* அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது” என்றார்.
* பீஷ்மர் திகைத்து எழுந்து பதறும் குரலில் “அன்னையே நீங்கள் சொல்வது அறப்பிழை….ஒருபோதும் செய்யக்கூடாதது அது…” என்றார். “அஸ்தினபுரியின் அரசி ஒருபோதும் எண்ணக்கூடாத திசை. வேண்டாம்” என்றார்.
* பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்”
* “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.
* மொத்தப்அண்டத்தையும் மொழியாக மட்டுமே அறியும் பேரருளைப் பெற்றவர் அவர் என்றது சூதர்குலம். படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.
* புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.
* அந்த மீன்கள் நீருக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பாடலே அவளிலும் ஒலிக்கிறது என்று உணர்ந்து கொண்டார். அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.
* மச்சகந்தி கருவுற்று உதரம் நிறைந்தபின் யமுனைக்குள் இருந்த மணல்தீவொன்றுக்குள் நாணலில் சிறுகுடிலைக் கட்டி அதில் தங்கிக்கொண்டாள். சித்திரை மாத முழுநிலவுநாளில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளைப்போலவே கருநிறமும் வைரம்போன்ற கண்களும் கொண்ட குழந்தை அது.
* கருநிறம் கொண்டிருந்ததால் அதை அவர்கள் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.