http://venmurasu.in/2014/02/16/ நூல்-ஒன்று-முதற்கனல்-47/
இப்பகுதியில் யயாதி குறித்த அறிமுகம் வருகிறது.
*********************************************************************************
வெண்முரசின் இப்பகுதி முழு மஹாபாரதத்தில் கடக்கும் பதிவுகள்...
- 83 யயாதியைத் தாக்கிய பலவீனம் - http://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section83.html
- 84 யயாதியின் முதுமையை ஏற்ற புரு - http://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section84.html
- 85 தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section85.html
- 86 யயாதியின் கடுந்தவம் - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section85_2.html
- 87 இந்திரன் யயாதி பேச்சு - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section87.html
- 88 அஷ்டகனை அடைந்த யயாதி - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section88.html
- Sacred texts Udyoga parva - http://www.sacred-texts.com/hin/m05/m05121.htm
நமது கருத்து:
யயாதியை பீஷ்மருடன் ஒப்பிட்டு நாகசூதன் கதை சொல்கிறான். அங்கே யயாதியிடம் பீஷ்மர் தன்னை உணர்கிறார். இங்கே யயாதியின் நிலை கிட்டத்தட்ட சந்தனுவின் நிலையே புரு பீஷ்மர் என்றால் அதில் இன்னும் அதிக ஒற்றுமை இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
இப்பகுதியில் //விண்ணுலகில் யயாதியின் அகந்தையைக் கண்டு பொறுமையிழந்த பிரம்மன் அவரைப் பழித்து மண்ணுக்குத்தள்ளினார்// என்று ஜெ. சொல்கிறார்.
முழு மஹாபாரதத்தில் இந்திரன் தள்ளியதாக வருகிறது. பார்க்க : http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section88.html
இப்பகுதியில் யயாதியின் கதையில் வரும் அஸ்ருபிந்துமதி மற்றும் மாதவி ஆகியோர் பத்மபுராணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். மஹாபராதத்தில் உத்யோக பர்வத்தின் 121வது பகுதியில் இக்கதை வருகிறது. http://www.sacred-texts.com/hin/m05/m05121.htm
நான் ரசித்த வரிகள்...
* “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர்.
* மண்ணில் முளைத்தவற்றையெல்லாம் உண்டுமுடித்த யானை முளைக்காது புதைந்துகிடக்கும் கோடானுகோடி விதைகளை உள்ளத்தால் உண்ணத் தொடங்கியது. உண்ண உண்ணப்பசிக்கும் தீராவிருந்து என்பர் காமத்தை.
* தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன். இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்” என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.