ஆதிபர்வம் பகுதி 3இ - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: உதங்கா சாலை வழி நடந்து செல்கையில், அவனை நோக்கி ஒரு அம்மண பிச்சைக்காரன் வருவது போல், தோன்றுவதும் மறைவதுமாக இருந்தான். உதங்கா கம்மல்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கிச் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, கம்மல்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். உதங்கா தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, கடவுள்களையும், ஆன்மிக குருக்களையும் வணங்கி வெகுவிரைவாகத் திருடனைப் பின்தொடர்ந்தான். மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, கம்மல்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்க முயற்சித்தான். உடனே அந்தப் பிச்சைக்காரன் தனது மாற்றுருவத்தைத் துறந்து, உண்மையான உருவான தட்சகன் உருவுடன் தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான். அந்தப் பொந்துக்குள் நுழைந்து தனது சொந்த இடமான பாம்புகளின் உலகிற்குச் சென்று சேர்ந்தான். உதங்கா, ராணி {மன்னன் பௌசியனின் மனைவி} சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தான். உடனே பாம்பைப் பின்தொடர அந்தப் பொந்தைத் தனது குச்சியை வைத்துப் பெரிதாக்கிப் பார்த்தான், ஆனால் பெரிய முன்னேற்றத்தை அவனால் {உதங்காவால்} காண முடியவில்லை. இந்திரன் அவனுக்கு {உதங்காவுக்கு} உதவ தனது இடியை (வஜ்ரம்) அனுப்பினான். அந்த இடி, அந்த குச்சிக்குள் நுழைந்து, அந்தப் பொந்தைப் பெரிதாக்கியது. உதங்கா அந்த இடியைப் பின்தொடர்ந்து பொந்துக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்ததும், பாம்புகளின் உலகம் ஒரு முடிவே இல்லாதிருப்பதைக் கண்டான். நூற்றுக்கணக்கான அரண்மனைகளும், பெரிய கோபுரங்களுடன் பெரிய வாயிற்கதவுகளுடன் கூடிய மாளிகைகளும், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் உகந்த பல்வேறு அற்புதமான இடங்கள், எனப் பலவும் அங்கே இருந்தன. உதங்கா கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொல்லி பாம்புகளைப் பெருமைப்படுத்தி மனம் நிறைய வைக்க முயற்சித்தான்.
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!