Arjuna betrayed great fierceness! | Shanti-Parva-Section-08 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : துறவறத்தை ஏற்கப்போவதாகச் சொன்ன யுதிஷ்டிரனை நிந்தித்த அர்ஜுனன்; செல்வத்தின் பெருமை, தேவர்களின் நடைமுறை, மன்னர்களின் கடமை ஆகியவற்றைச் சொன்னது; குதிரைவேள்வி செய்யுமாறு யுதிஷ்டிரனை வற்புறுத்தியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கூரிய பேச்சு, ஆற்றல் மற்றும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், அவமதிப்பை மன்னிக்க விரும்பாத ஒரு மனிதனைப் போல, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டு, பெருஞ்சீற்றத்தை வெளிக்காட்டியபடியே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைப் புன்னகையுடன் சொன்னான்:(1,2)
{அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இஃது எவ்வளவு வலிநிறைந்ததாக இருக்கிறது? எவ்வளவு துயரைத் தருவதாக இருக்கிறது? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனையைச் செய்துவிட்டு, இந்தப் பெருஞ்செழிப்பைக் கைவிட நினைப்பதால், உமது இதயத்தில் உள்ள இந்தப் பெருங்கலக்கத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.(3) உமது எதிரிகளைக் கொன்று, உமது {க்ஷத்திரிய} வகைக்கான கடமையை நோற்றதன் மூலம், பூமியின் அரசுரிமையை அடைந்த பிறகு, உமது இதயத்தின் நிலையின்மையால், நீர் அடைந்த அனைத்தையும் ஏன் நீர் கைவிட வேண்டும்?(4) ஓர் அலியோ, எதிலும் தாமதம் செய்பவனோ இந்தப் பூமியில் அரசுரிமையை எங்கேயாவது, எப்போதாவது அடைந்திருக்கிறானா? பிறகு, சினத்தால் உணர்வை இழந்த நீர், ஏன் பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொன்றீர்?(5)
{அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இஃது எவ்வளவு வலிநிறைந்ததாக இருக்கிறது? எவ்வளவு துயரைத் தருவதாக இருக்கிறது? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனையைச் செய்துவிட்டு, இந்தப் பெருஞ்செழிப்பைக் கைவிட நினைப்பதால், உமது இதயத்தில் உள்ள இந்தப் பெருங்கலக்கத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.(3) உமது எதிரிகளைக் கொன்று, உமது {க்ஷத்திரிய} வகைக்கான கடமையை நோற்றதன் மூலம், பூமியின் அரசுரிமையை அடைந்த பிறகு, உமது இதயத்தின் நிலையின்மையால், நீர் அடைந்த அனைத்தையும் ஏன் நீர் கைவிட வேண்டும்?(4) ஓர் அலியோ, எதிலும் தாமதம் செய்பவனோ இந்தப் பூமியில் அரசுரிமையை எங்கேயாவது, எப்போதாவது அடைந்திருக்கிறானா? பிறகு, சினத்தால் உணர்வை இழந்த நீர், ஏன் பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொன்றீர்?(5)
பிச்சையெடுத்து வாழும் ஒருவனால் எப்போதும் தன் எந்தச் செயலாலும், பூமியில் நல்ல பொருட்களை அனுபவிக்க முடியாது. செழிப்பை இழந்து, எந்த வளமும் அற்றவனான அவனால் ஒருபோதும் பூமியில் புகழை வெல்லவோ, மகன்கள் மற்றும் விலங்குகளை அடையவோ முடியாது.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெருகும் இந்த நாட்டைக் கைவிட்டு, நீர் துறவியின் அற்ப வாழ்வை வாழ்ந்தால், இந்த உலகம் உம்மைப் பற்றி என்ன சொல்லும்?(7) பூமியின் நல்ல பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, செழிப்பை இழந்து, வளமற்ற இழிந்த மனிதனைப் போலப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை நோற்கப் போவதாக நீர் ஏன் சொல்கிறீர்?(8) நீர் மன்னர்களின் இந்தக் குலத்தில் பிறந்திருக்கிறீர். படையெடுத்து மொத்த பூமியையும் வென்ற பிறகு, அறம், பொருள் சம்பந்தமான அனைத்தையும் கைவிட்டுக் காட்டில் வாழ விரும்புவது உமது மடமையே.(9) (நீர் காட்டுக்கு ஓய்ந்து சென்றால்), நீர் இல்லாத போது, வஞ்சகர்கள் வேள்விகளை அழிப்பார்கள். அந்தப் பாவம் நிச்சயம் உம்மைக் களங்கப்படுத்தும்.(20)
மன்னன் நகுஷன் {நஹுஷன்} ஏழ்மை நிலையில் தீய செயல்கள் பலவற்றைச் செய்துவிட்டு, அந்நிலை நிந்திக்கத்தக்கது என்று கதறி, ஏழ்மையானது தனித்து ஒதுங்கி துறவியாக வாழ்பவர்களுக்கானதே என்று சொன்னான்[1].(11) நாளைக்கென்று எந்த ஏற்பாட்டையும் செய்து கொள்ளாதது, முனிவர்களுக்குத் தகுந்த நடைமுறையாகும். இதை நீர் நன்கறிவீர். எனினும், அரச அறம் என்று சொல்லப்படுவது முற்றிலும் செல்வத்தை நம்பியே இருக்கிறது.(12) மற்றொருவனிடம் இருந்து செல்வத்தைத் திருடும் ஒருவன், அவனிடம் இருந்து அறத்தையும் சேர்த்தே திருடுகிறான்[2]. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நம்மைக் கொள்ளையிட்ட ஒரு செயலை நம்மில் எவரால் மன்னிக்க முடியும்?(13) ஏழையானவன் அருகில் இருந்தாலும், பொய்யாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான்[3]. ஏழ்மை என்பது பாவம் நிறைந்த ஒரு நிலையாகும். எனவே, ஏழ்மையைப் புகழ்வது உமக்குத் தகாது.(14) ஓ! மன்னா, {அறம் வழுவி} வீழ்ந்து விட்ட ஒரு மனிதன், ஏழையைப் போலவே வருந்துகிறான். வீழ்ந்துவிட்ட ஒரு மனிதனுக்கும், ஓர் ஏழைக்கும் இடையில் என்னால் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஒன்றுமில்லாதிருப்பது முனிகளுடைய தருமமாகும். பொருளில்லாத காலத்தில் கொடுமையான கார்யத்தைச் செய்துவிட்டு, "பொருளில்லாமை நிந்திக்கத்தக்கது" என்று நகுஷன் சொன்னான்" என்றிருக்கிறது.[2] "ஏனெனில், செல்வமே, அதைக் கொண்டிருக்கும் ஒருவனை அறச்சடங்குகளைச் செய்ய வைக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "ஜனங்கள், பக்கத்திலிருக்கும் தரித்திரனைத் தோஷமுள்ளவனைப் போலப் பார்க்கிறார்கள்" என்றிருக்கிறது.
தகுதிவாய்ந்த அனைத்து வகைச் செயல்களும், மலையில் இருந்து பாய்வது போல, பெருஞ்செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செல்வத்திலிருந்தே அனைத்து அறச்செயல்களும், அனைத்து இன்பங்களும், சொர்க்கமும் எழுகின்றன. செல்வம் இல்லாமல் ஒரு மனிதனால், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளையே கூடக் கண்டறிய முடியாது.(17) கோடை காலத்தில் நீர் வற்றிய ஆழமற்ற ஓடைகளைப் போல, சிறுமதி கொண்டோன் ஒருவன், தன் செயல்களால், தனது செல்வத்தை இழக்கும் நிலையை அடைகிறான்.(18)
செல்வம் கொண்டவனே நண்பர்களைக் கொண்டவனாவான். செல்வம் கொண்டவன் உறவினர்களையும் கொண்டவனாவான். செல்வம் கொண்டவனே உண்மையான மனிதனாக இவ்வுலகில் கருதப்படுகிறான். செல்வம் கொண்டவன் எவனோ, அவனே கல்விமானாகவும் கருதப்படுகிறான்.(19) செல்வமற்ற ஒருவன் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையாவது அடைய விரும்பினால், அவன் தோல்வியையே சந்திக்கிறான். யானைகள், காட்டு யானைகளைக் கைப்பற்றுவதைப் போல, செல்வமே, செல்வத்தைப் பெருக வைக்கவும் செய்கிறது.(20)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} அறச்செயல்கள், இன்பங்கள், மகிழ்ச்சி, துணிவு, கோபம், கல்வி, கௌரவம் ஆகிய அனைத்தும் செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(21) செல்வத்தாலேயே ஒருவன் குடும்பக் கௌரவத்தையும் அடைகிறான். செல்வத்தாலேயே ஒருவனின் அறத்தகுதிகள் பெருகுகின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, செல்வமில்லாதவனுக்கு இவ்வுலகமோ, மறு உலகமோ கிடையாது.(22) மலையிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளைப் போல, செல்வத்தில் இருந்தே அறச்செயல்கள் ஊற்றெடுப்பதால், செல்வமில்லாத மனிதன் அறச்செயல்களைச் செய்வதில் வெல்வதில்லை.(23) குதிரைகள், பசுக்கள், பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியவற்றில் (ஆகியவற்றைக் கொள்வதில்) மெலிந்தவனே உண்மையில் மெலிந்தவனாவான், அங்கங்களால் மட்டுமே மெலிந்தவன் அவ்வாறாகமாட்டான்.(24)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் தானவர்களின் நடைமுறைகளைக் கண்டு உண்மையைத் தீர்மானித்துக் கொள்வீராக. ஓ! மன்னா, தேவர்கள், தங்கள் உறவினர்களை (அசுரர்களைக்) கொல்வதைத் தவிர வேறு எதையாவது எப்போதும் விரும்புகிறார்களா?(25) அடுத்தவரின் செல்வத்தை அடைவது அறமாகக் கருதப்படவில்லையெனில், ஓ! ஏகாதிபதி, மன்னர்களால் எவ்வாறு இந்தப் பூமியில் அறம்பயில முடியும்? கல்விமான்கள், வேதங்களில் இருந்து {பின்வரும்} இந்தத் தீர்மானங்களையே விதித்திருக்கின்றனர்.(26) மன்னர்கள், தினமும் மூன்று வேதங்களையும் உரைத்து, செல்வத்தை அடைய முனைந்து, அவ்வாறு அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு கவனமாக வேள்விகளைச் செய்து வாழ வேண்டும் என்று அக்கல்விமான்கள் விதித்திருக்கின்றனர்.(27) தேவர்கள், உறவினர்களுடன் {அசுரர்களுடன்} கொண்ட பகையின் மூலமே சொர்க்கத்தில் தங்கள் பாதங்களைப் பதித்தனர். தேவர்களே தங்கள் செழிப்பை உறவினர்களுடன் {தானவர்களுடன்} கொண்ட பகையால் அடைந்தார்கள் என்றால், அத்தகு பகையில் என்ன தவறு இருக்க முடியும்?(28) தேவர்கள் இவ்வாறு செயல்படுவதையே நீர் காணலாம். வேதங்களின் அழிவில்லா விதிகளும் அஃதை அங்கீகரிக்கின்றன. கற்பது, போதிப்பது, வேள்வி செய்வது, பிறரின் வேள்விகளில் உதவி செய்வது ஆகிய இவையே நமது முக்கியக் கடமைகளாகும். பிறரிடம் இருந்து மன்னர்கள் அடையும் செல்வம்தான், அவர்களது செழிப்பின் ஆதாரங்களாகின்றன. பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் ஈட்டப்பட்ட செல்வத்தை நாம் ஒருபோதும் கண்டதில்லை.(29,30)
இவ்வாறே மன்னர்கள் இந்தப் பூமியைக் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றிய பிறகு, மகன்கள் தங்கள் தந்தைமாரின் செல்வத்தை {தங்கள் செல்வமாகவே} சொல்வதைப் போல, அவர்கள் அதைத் தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்கின்றனர். சொர்க்கத்திற்குச் சென்றிருக்கும் அரச முனிகள், இதையே மன்னர்களின் கடமையாக அறிவித்திருக்கின்றனர்.(31) பெருகும் கடலின் அனைத்துத் திசைகளிலும் நீர் பாய்வதைப் போல, செல்வமானது, மன்னர்களின் கருவூலங்களில் இருந்து அனைத்துத் திசைகளிலும் பாய்கிறது.(32) இந்தப் பூமியானவள், முன்பு மன்னன் திலீபனுக்கும், நகுஷனுக்கும், அம்பரீஷனுக்கும், மாந்தாதாவுக்கும் சொந்தமானவளாக இருந்தாள். இப்போது அவள் உம்முடையவளாகியிருக்கிறாள்.(33)
எனவே, அனைத்து வகைக் கொடைகளை அபரிமிதமாகக் கொண்டதும், பூமியின் உற்பத்தியில் ஒரு பெருங்குவியலைத் தேவையாகக் கொண்டதுமான ஒரு பெரும் வேள்வி உமக்காகக் காத்திருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அந்த வேள்வியைச் செய்யவில்லையெனில், இந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் உமதேயாகும்.(34) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தைச்} செய்த ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும், அவ்வேள்வியின் முடிவில் தூய்மையடைந்தவர்களாக, புனிதமடைந்தவர்களாக ஆகிறார்கள்.(35) அண்ட வடிவிலான மகாதேவனே, அனைத்து வகை இறைச்சிகளும் ஆகுதிகளாகத் தேவைப்படும் {ஸர்வமேதம் என்றழைக்கப்படும்} ஒரு பெரும் வேள்வியில், அனைத்து உயிரினங்களையும், அதன் பிறகு தன்னையும் வேள்விக் காணிக்கையாக அஃதில் ஊற்றினான்.(36) இந்த மங்கலகரமான பாதையே அழிவில்லாததாகும். இதன் கனிகள் ஒருபோதும் அழிவடைவதில்லை. இந்தப் பெரும்பாதையே தாசரதம் {அழிவில்லாத பாதை} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, இதைக் கைவிட்டுவிட்டு, நீர் எந்தப் பாதையை அடையப் போகிறீர்?" என்று கேட்டான் {அர்ஜுனன்}.(37)
சாந்திபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |