நாடாளும் மன்னனிடம் அருகில் இருப்பவர்கள் எப்படி பழகவேண்டும்?
நாட்டை ஆட்சி செய்பவரின் {அரசை வழிநடத்துபவரின்} அருகில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தில் இருப்பவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
**********************************************************************
எந்த வரலாற்றைக் கேட்டால் மனிதன் பூரண மன அமைதியை அடைவான்?
வனபர்வத்தின் கடைசி பர்வமான - ஆரண்யப் பர்வத்தினை படிக்கும் மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும்.
அரணிகளைத் தூக்கிச் சென்ற மான்! - வனபர்வம் பகுதி 309
நாட்டை ஆட்சி செய்பவரின் {அரசை வழிநடத்துபவரின்} அருகில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தில் இருப்பவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
எந்த வரலாற்றைக் கேட்டால் மனிதன் பூரண மன அமைதியை அடைவான்?
வனபர்வத்தின் கடைசி பர்வமான - ஆரண்யப் பர்வத்தினை படிக்கும் மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும்.
அரணிகளைத் தூக்கிச் சென்ற மான்! - வனபர்வம் பகுதி 309
தம்பிகளுக்காக அழுத யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311அ
யக்ஷனின் கேள்விகளும்! யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311ஆ
யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311இ
"நகுலன் பிழைக்கட்டும்" என்ற யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311ஈ
யக்ஷனின் கேள்விகளும்! யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311ஆ
யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311இ
"நகுலன் பிழைக்கட்டும்" என்ற யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311ஈ
.........(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}” {என்றார் வைசம்பாயனர்}. - See more at: http://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Vanaparva-Section312.html#sthash.J8GSfF05.dpuf
****************************************************************
எந்த வரலாற்றைக் கேட்டால் மனிதனின் ஆசைகள் காமவிகார முடிவை நோக்கி ஓடாது? நோக்கி ஓடாது?

*******************************************************************
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் தன்மைகள் என்ன? இவற்றினால் உண்டாகும் பயன்கள் என்ன?அறம்பயில்பவன் ஏன் துன்புறுகிறான்? - வனபர்வம் பகுதி 33அ

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சத்தியத்துடன் ஒட்டிக் கொள்ளும் வெற்றுத் தகுதிக்குக் {அறத்திற்குக்} கீழ்ப்படிந்து, துன்பத்தினை அனுபவித்து, அறம் மற்றும் இன்பத்திற்கு ஊற்றுக்கண்ணான செல்வத்தை ஏன் கைவிட வேண்டும்.......
*******************************************************************
செயல்படுதலின்/முயற்சி செய்தலின் பலன்கள் எத்தகையது?
செயல்பாடில்லா வாழ்வு சாத்தியமற்றது! - வனபர்வம் பகுதி 32
திரௌபதி சொன்னாள், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள்.
முழுவதும் மேலும் படிக்க>>>
********************************************************************
கோபத்தின் தன்மைகள் எத்தகையது?
கோபம் அனைத்தையும் அழித்துவிடும் - வனபர்வம் பகுதி 29
யுதிஷ்டிரன் சொன்னான், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ பெரும் ஞானம் கொண்டவளே {திரௌபதியே}, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். ஓ அழகானவளே, எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை......
முழுவதும் மேலும் படிக்க>>>
முழுவதும் மேலும் படிக்க>>>
****************************************************************
மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா?
பணிவே சாதிக்கும்! - வனபர்வம் பகுதி 28
![]() |
பாட்டன் பிரகலாதனும் பேரன் பலிச்சக்கரவர்த்தியும் |
திரௌபதி தொடர்ந்தாள், "இவ்விஷயத்தில், பிரகலாதனுக்கும், விரோசனனின் மகனான பலிக்கும் {பலிசக்கரவர்த்திக்கும்} இடையே பழங்காலத்தில் நடந்த உரையாடல் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அசுரர் மற்றும் தானவர்களின் தலைவனும், பெரும் ஞானம் கொண்டவனும், கடமை குறித்த அறிவியலின் புதிர்களை நன்கு அறிந்தவனுமான தனது பாட்டன் பிரகாலதனிடம், "ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!" என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}........................
**********************************************************************
அழியப் போகும் ஒருவனுக்கு ஆண்டவன் முதலில் எதைக் கொடுப்பான்?
சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா},யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும்".
யாரையெல்லாம் மகன்களாக {வாரிசாகக்} எற்றுக் கொள்ளலாம்?
பாண்டு சொன்ன கதை - ஆதிபர்வம் பகுதி 120
தர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்போதுள்ள வழக்கத்தின்படி நான் அதைச் சொல்கிறேன். ஓ பிருதா {குந்தி}, நான் சொல்வதைக் கேள்.
{1}அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை,
{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை, {5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
{10} கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,
{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.
முழுவதும் மேலும் படிக்க >>>
*****************************************************************
யாரை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும்?
அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172
![]() |
சித்ரரதனும் -அர்ஜுனனும் |
நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஒரு ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான். கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும். தனது வளமையை விரும்பும் ஒருவன் எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான். ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது வீரத்தால் நிலத்தையோ அல்லது, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது. ஆகையால், ஓ குரு குலத்தை தழைக்க வைப்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்", என்றான் {சித்ரரதன்}.
முழுவதும் மேலும் படிக்க >>>
முழுவதும் மேலும் படிக்க >>>
********************************************************************
திருமணங்களின் வகைகள்:
சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 73
துஷ்யந்தன் சகுந்தலையிடம் "அழகானவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள். ஓ கூராக இறங்கிச் செல்லும் தொடைகளைக் கொண்டவளே, திருமண முறைகள் எல்லாவற்றிலும் கந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது", என்றான் {துஷ்யந்தன்}.
மொத்தம் எட்டு {8} வகை திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிரம்மம், தெய்வ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, கந்தர்வ, ராட்சத, பைசாச என்ற வகைகளாகும். சுயும்புவின் மகன் மனு, இவற்றின் எல்லா தகுதிகளையும் அவற்றின் ஒழுங்குக்கேற்ப சொல்லயிருக்கிறார். ஓ களங்கமற்றவளே {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு {4} வகையும் பொருந்தும், சத்திரியர்களுக்கு முதல் ஆறு {6} வகையும் பொருந்தும். மன்னர்களுக்கு இராட்சத வகையும் அனுமதிக்கப்படுகிறது. அசுர வகை வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று சரியானவை, மீதம் இரண்டும் சரியில்லாதவை. பைசாச மற்றும் அசுர வகைகள் நடைமுறையில் செய்யப்படவே கூடாது. இவையே தர்மத்தின் அங்கங்களாகும். எவனொருவனும் அதன்படி நடக்க வேண்டும். கந்தர்வ மற்றும் இராட்சத வகை சத்திரியர்களுக்கு ஏற்றது. நீ இதனால் சிறு பயமும் அடையத் தேவையில்லை. கடைசியில் சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம். ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, ஆசையால் நிறைந்திருக்கிறேன் நான். நீயும் அவ்வாறே இருக்கிறாய். கந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகு", என்றான் {துஷ்யந்தன்}.
முழுவதும் மேலும் படிக்க >>>
*******************************************************************
முழுவதும் மேலும் படிக்க >>>
*******************************************************************
திருமணமான பெண்களுக்கான நீதிகள்:
துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ
கன்வர் {கன்வ முனிவர்-சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை} தனது சீடர்களிடம், "சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் தாங்கிச் செல்லுங்கள். பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகு காலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது, அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.
அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்'', என்றார்.
முழுவதும் மேலும் படிக்க >>>
******************************************************************