வேள்வி முகம் - 3 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=43847
இந்தப் பகுதியில் ஜனமேஜயன் தனது தந்தை பரிக்ஷித்தின் கதையை உதங்கா மூலமாக அறிதல். உதங்கா பரிக்ஷித் சமீகரை அவமதித்ததையும் அதனால் அவனுக்கு ஏற்பட்ட சாபத்தையும், பரிக்ஷித் இறந்த முறையையும் எடுத்துச் சொல்கிறார் ஜெயமோகன்
****************************************************************************************
வேள்வி முகம் - 3 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...

- ஜனமேஜயன் துயரம் | ஆதிபர்வம் - பகுதி 3 இ
- பரிக்ஷித்தின் வேட்டை | ஆதிபர்வம் - பகுதி 40
- பரிக்ஷித்துக்கு செய்தி வந்தது | ஆதிபர்வம் - பகுதி 42
- பரிக்ஷித்தைக் கொன்றான் தக்ஷகன்| ஆதிபர்வம் - பகுதி 43
- பரிக்ஷித் வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 49
****************************************************************************************
இந்தப் பதிவு ஜனமேஜயன், அபிமன்யு, உத்தரை, கிருஷ்ணன், பரிக்ஷித்து, பரிக்ஷித்துக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என ஓட்டமும் நடையுமாக பல கதைகளை விவரித்துவிடுகின்றது. இருப்பினும் சொற்களின் ஆழம் நம்மை நின்று கவனித்து செல்ல வைக்கிறது.
திரு.ஜெயமோகன் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான கதையைத் தருகிறார். அது மூலத்திற்கு சற்றும் நெருக்கமில்லாததாக இருந்தாலும் வசீகரமாக இருக்கிறது. குறிப்பாக சமீகரின் மகனான சிரிங்கின் என்ற பாத்திரத்தை குரங்காகவும் அவனது பெயரை கவிதாஜன் என்பதாகவும் சொல்கிறார். இவற்றை எந்தப் புராணத்தில் இருந்து எடுத்தாரோ தெரியவில்லை. இந்தக் கதை முற்றிலும் புதியதாக இருக்கிறது. அனகன் என்ற பாம்பைக் குறித்த செய்திகளும் புதியதாகவே இருக்கிறது. மேலும் தட்சகனை எப்படி தட்சனாக உருவகிக்கிறார் என்பது விளங்கவில்லை. எது எப்படி இருப்பினும் கதை சொல்லும் அழகு தனித்து நிற்கிறது. படிக்கச் சுவையாக இருக்கிறது.
இனி வேள்வி முகம் 3-ல் நான் ரசித்த சில வரிகள்.

- உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை இல்லையேல் ஒருவன் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார்.
- அபிமன்யுவின் மரணத்தின் போது உத்தரையின் மனநிலையை //அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்// என்ற வார்த்தைகளால் படம்பிடித்துக் காட்டுகிறார்.
- பரீட்சித்தின் பெயர்க்காரணம் //சிப்பிகளுக்குள் வளர்ந்த சோதனையாலேயே அவனை அனைவரும் பரீட்சித் என்று அழைத்தனர்.//
- பாண்டவர்களின் நெடும்பயணம் //பரீட்சித்துக்கு பதினெட்டு வயதிருக்கையில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவனை இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனாக பட்டம்சூட்டி ஆட்சியதிகாரத்தை யுயுத்சுவிடம் கையளித்துவிட்டு தன் சகோதரர்களுடன் மகாபிரஸ்தானம் சென்றார்.//
- ஆனகன் என்ற பாம்பைப் பற்றிய இது முற்றிலும் புதிய செய்தி //ஜனமேஜயா, அந்தப்பாம்பின் பெயர் ஆனகன் என்றார் உத்தங்கர். மண்ணுலகை நிறைத்திருக்கும் நாகர்களின் உலகைச்சேர்ந்தவன் அவன். குருகுலமன்னர்களை ஒவ்வொருகணமும் நாகங்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றைய பணியை ஆனகன் செய்துகொண்டிருந்தான். //
- சமீகரின் மகன் பெயர் சிரிங்கின் ஆனால் இந்தப் பதிவில் சிரிங்கின் என்கிறார்.
- குருக்ஷேத்திரம் குறித்து சொல்லுதல் //அஸ்தினபுரியின் ஒவ்வொரு மனமும் அறிந்த இடம், மூன்றுதலைமுறைகளாக எவருமே வந்திராத இடம் என்றான் கவிஜாதன். இங்கே வருவதற்கு மானுடப்பாதைகள் இல்லை, நரிகளின் தடம் மட்டுமே உள்ளது. இந்த மண்ணின் பெயர்தான் குருஷேத்ரம்.//
- இந்தப் பதிவின் படம் இந்த வரிகளை விளக்குகிறது, //அங்கே ஆடும் நிழல்களை கவனிக்கும்படி கவிஜாதன் சொன்னான். ஒளியைக் கண்ட கண்களை நிழலைக்காணும்படி பழக்கியபோது பரீட்சித் நாகங்களைக் கண்டான். இருண்ட மெல்லிய நிழலாட்டங்களாக நாகங்கள் அங்கே நிறைந்திருந்தன. கண் தெளியும்தோறும் நாகங்கள் பெருகிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் கருநாகங்களாலான மாபெரும் வலையொன்றைக் காணமுடிந்தது. நெளிந்துகொண்டிருந்த அந்தவலையில் அந்த படுகளம் சிக்கி அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.//
- இங்கே தட்சகன் என்ற பாம்பை தட்சன் என்கிறார். ஒரு வேளை பார்வதியின் தகப்பனான தட்சனே தட்கன் என ஏற்றுக் கொள்கிறாரோ என்னவோ //அதோ சுடர்விடும் அந்த இரு செவ்விழிகளும் நாகங்களின் அரசனான தட்சனுடையவை. இன்றில் இருந்து ஏழாம் நாள், மார்கழி மாதம் சப்தரிஷி விண்மீன்கள் ஏழும் ஒரே ராசியில் வந்து சேரும்போது நீ அவன் விஷக்கடியை ஏற்று உயிர்விடுவாய்’ என்றான் கவிஜாதன்.//
- நாகம் சம்பந்தமான தத்துவ செய்தி //நாகங்கள் தங்கள் நிழல்களில் இருந்தே மீண்டும் முளைத்தெழக்கூடியவை. ஒவ்வொரு உடலிலும் நாகங்கள் உள்ளன. மிருகங்களில் வாலாகவும் நாவாகவும் இருப்பவை நாகங்களே. மனிதர்களின் கைநகங்களெல்லாம் நாகத்தின் பற்களே’ //
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!