http://www.jeyamohan.in/?p=43860
இந்தப் பகுதியில் ஜனமேஜயன் வைசம்பாயனர் மூலமாக வேள்வியைத் தொடர்ந்து செய்தல்; ஜனமேஜயனின் சிறுவயது நிகழ்வான சரமா என்ற நாய் கொடுத்த சாபம்; பாம்புகள் வந்து வேள்வியில் மடிவது; ஆஸ்தீகர் தட்சகனைக் காப்பாற்றியது ஆகிய நிகழ்வுகள் வருகின்றன.
****************************************************************************************
வேள்வி முகம் - 4 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- நீதி கேட்ட நாயின் சாபம் | ஆதிபர்வம் - பகுதி 3 அ - http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html
- சூத சாதிக்காரன் தீர்க்க தரிசனம் | ஆதிபர்வம் - பகுதி 51 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section51.html
- நெருப்பில் விழுந்த பாம்புகள் | ஆதிபர்வம் - பகுதி 52 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section52.html
- தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன் | ஆதிபர்வம் - பகுதி 53 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section53.html
- ஆஸ்தீகர் உறுதி | ஆதிபர்வம் - பகுதி 54 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section54.html
- ஆஸ்தீகர் புகழ்ச்சி | ஆதிபர்வம் - பகுதி 55 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section55.html
- தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன் | ஆதிபர்வம் - பகுதி 56 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section56.html
- பாம்புகள் யாரைக் கடிக்காது? | ஆதிபர்வம் - பகுதி 58 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section58.html
****************************************************************************************
முழு மஹாபாரதத்தில் சூத சாதியைச் சேர்ந்த கட்டுமானக் கலைஞனின் பெயர் லோஹிதாக்ஷா என்று வருகிறது. ஆனால் இங்கு வேறு பெயர் சுட்டப்படுகிறது. //ஜனமேஜயன் அக்கணத்தில் வேள்விச்சாலையைக் கட்டிய சிற்பி விஸ்வசேனன் நிமித்தம்பார்த்து அந்தவேள்விக்கு ஒரு அந்தணனால் தடைவரக்கூடும் என்று சொன்ன சொற்களைத்தான் நினைவுகூர்ந்தார்.//
இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள்
* புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார்.
* அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன.
* இவ்வுலகத்தின் அழுக்குகள் எல்லாம் பொசுங்கி விட்டன… நாளை உதித்து எழும் சூரியன் புத்தம்புதிய பூமியை பார்க்கப்போகிறான்!
* எரிந்து எழுந்த வேள்விச்சுடரில் அவர்கள் தங்கள் இறுதி ஆகுதியைச் செலுத்தினர். தலைமுறைகள் உறங்கும் தங்கள் விந்துக்களின் வீரியங்கள் அனைத்தும் அவியாகுக என்றனர். அந்த மதலைகளைப் பற்றிய தங்கள் கனவுகளும் எரிந்தழிக என்றனர்.
* என் மூதாதையர் எனக்களித்த நல்லூழ்கள் அனைத்தையும் கேளுங்கள். இதை மட்டும் கேட்காதீர்கள்.
* “மாமன்னரே, நெறிநூல்களின்படி மண்ணாளும் குலமே தாய்வழி வருவது. வேதவிதிகளுக்கான குலம் தந்தையின் வழியாக வருவதே. நான் வேத அதிகாரம் கொண்ட அந்தணரிஷியின் மைந்தன்” என்றான். மன்னன் வைசம்பாயனரை நோக்க “ஆம் அவர் சொல்வது சரிதான்” என்றார் அவர்.
* ஆஸ்தீகன் அமைதியான குரலில் “ஜனமேஜய மன்னரே! நான் செய்ததன் பொருள் இப்போது உங்களுக்குப் புரியாது. ஒருநாள் உங்கள் தலைமுறைகள் இதை புரிந்துகொள்வார்கள்… நான் உங்களுக்காக உங்கள் மக்களுக்காக இந்த உலகத்தின் நன்மைக்காகவே இதைச் செய்தேன். இது என் தன்னறம்” என்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.