Showing posts with label ஜதுக்கிரக பர்வம். Show all posts
Showing posts with label ஜதுக்கிரக பர்வம். Show all posts

Thursday, July 18, 2013

அழ ஆரம்பித்த பீமன் - ஆதிபர்வம் பகுதி 153

Bhima started to cry | Adi Parva - Section 153 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : தன் தாயையும், சகோதரர்களையும் ஒரு ஆலமரத்தடியில் விட்டுவிட்டு நெடுந்தொலைவு சென்று நீர் கொணர்ந்து வந்த பீமன்; பஞ்சணையில் படுப்பவர்களான தனது தாயாரும், சகோதரர்களும்  கட்டாந்தரையில் கிடப்பதைக் கண்டு புலம்பி அழுதது...

Bhima started to cry 
Adi Parva - Section 153 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் முன்னேறிச் செல்கையில், அவனது மார்பின் மோதலால் அந்த முழுக் கானகமே அதன் மரங்களுடனும், கிளைகளுடனும் நடுங்குவது போலத் தெரிந்தது.(1) அவனது தொடைகளின் அசைவு உண்டாக்கிய காற்றானது, ஆனி மற்றும் ஆடி மாதக் காற்றைப் போல வீசியது. அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் மரங்களையும், செடிகொடிகளையும் சாய்த்துத் தனக்கான வழியை உண்டாக்கியபடியே முன்னேறிச் சென்றான்.(2)  உண்மையில் அவன், தன் வழியில் நின்ற பெரும் மரங்களையும், செடிகளையும், அதன் பூக்கள் மற்றும் கனிகளுடன் ஒடித்துப் போட்டு முன்னேறிச் சென்றான்.(3) யானை மந்தையின் அறுபது வயதான தலைமை யானை குறிப்பிட்ட காலத்தில் தனது உடலின் மூன்று பகுதிகளில் நீர் வழிய, பெரும் மரங்களை ஒடித்துப் போட்டுக் கடந்து செல்வதைப் போல அந்தக் கானகத்தைப் பீமன் கடந்து சென்றான்.(4) பீமனின் சக்தி, கருடன் மற்றும் மருதனின் (வாயுத்தேவன்) வேகத்திற்கு இணையாக இருந்தது. அதனால் பாண்டவர்கள் {அப்படிச் செல்லும் பீமன் மீது அமர்ந்து இருந்ததால்} மயக்கமடையும் சூழல் ஏற்பட்டது.(5)

Wednesday, July 17, 2013

யுதிஷ்டிரன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 152

The sorrow of Yuthishthira | Adi Parva - Section 152 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : வாரணவத மக்கள் பாண்டவர்கள் இறந்ததாகக் கருதியது; திருதராஷ்டிரனுக்கு செய்தியைச் சொல்லியனுப்பிய மக்கள்; பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தச் சொன்ன திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரன் அடைந்த துயரம்...

The sorrow of Yuthishthira
Adi Parva - Section 152 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "இரவு கழிந்ததும், நகரத்து மக்கள் பெருமளவில் கூடி பாண்டுவின் மைந்தர்களைக் காண வந்தனர்.(1) எரிந்து போன அவ்வீடு அரக்கைக் கொண்டு கட்டப்பட்டது என்பதையும், அதைக் கட்டிய (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து இறந்தான் என்பதையும் நெருப்பை அணைத்த பிறகு அம்மக்கள் அறிந்தனர்.(2)

அவர்கள், "பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.(3) திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.(4) சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது.(5) சரி இனி, "உனது பெரும் விருப்பம் ஈடேறியது! நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்" என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.(6)

Tuesday, July 16, 2013

கங்கையைக் கடந்த பாண்டவர்கள் - ஆதிபர்வம் பகுதி 151

Pandavas crossed the Ganga | Adi Parva - Section 151| Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 9)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்காகப் படகை அனுப்பி வைத்த விதுரன்; கங்கையைக் கடந்து சென்ற பாண்டவர்கள்...

Pandavas crossed the Ganga
Adi Parva - Section 151 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "அதே நேரத்தில் விதுரன் தனது நம்பிக்கைக்குரியவனும், நல்ல குணம் படைத்தவனுமான ஒரு மனிதனை அந்தக் கானகத்திற்குள் அனுப்பி வைத்தான்.(1) அந்த மனிதன், கானகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், கங்கையின் ஆழத்தை அளந்து கொண்டிருந்த பாண்டவர்களை அவர்களது தாயாருடன் கண்டான்.(2) துன்மார்க்கனான துரியோதனனின் தீய திட்டங்களைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த புத்திக்கூர்மையுள்ள விதுரன், அதன் காரணமாகவே அந்த விவேகமுள்ள மனிதனைப் பாண்டவர்களிடம் அனுப்பினான்.(3) விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், புனிதமான கங்கையின் கரையில் இயந்திரங்களுடனும் கொடிகளுடனும் கூடிய படகொன்றைப் பாண்டவர்களுக்குக் காட்டினான். அப்படகு, கடும் காற்றையும் அலைகளின் வேகத்தையும் புயல்காலத்திலும் சமாளிக்கும் வண்ணம் நம்பிக்கைக்குரிய கைவினைஞர்களால் கட்டப்பட்டிருந்தது.(4,5)

அம்மனிதன், தான் விதுரனால்தான் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்கப் பாண்டவர்களிடம், "ஒ யுதிஷ்டிரா, கற்றறிந்த விதுரர், நான் அவரிடம் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லியனுப்பினார்.(6) 'வைக்கோலை உண்பவனோ {அக்னி}, பனியைக் காய வைப்பவனோ {சூரியன்} கானகத்தின் பொந்தினுள் வசிப்பவனை எரிக்க முடியாது. இதை அறிந்தவன் தன்னை மரணத்தில் இருந்து காத்துக் கொள்வான்.' என்ற வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்.(7) இதன் மூலம் நான் விதுரரால் அனுப்பப்பட்டவன்தான் என்பதையும், நான் நம்பிக்கைக்குரியவன் என்பதையும் அறிந்து கொள்வீராக. அனைத்தையும் அறிந்த விதுரர், 'ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ நிச்சயமாகக் கர்ணன், துரியோதனன், அவனது சகோதரர்கள், மற்றும் சகுனியைப் போரில் தோற்கடிப்பாய்' என்று நான் சொன்னதாகச் சொல்.' என்றார்.(8,9) இப்போது நீரில் இருக்கும் இந்தப் படகு, புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இது நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதிகளிலிருந்து சுமந்து செல்லும்" என்றான்.(10)

அந்த மனிதர்களில் சிறந்தவர்கள், தங்கள் தாயுடன் சோகமாக இருப்பதைக் கண்ட அம்மனிதன், அவர்களைக் கங்கையின் மீதிருந்த படகில் ஏற்றி, அவர்களுடன் தானும் ஏறிக் கொண்டான். அப்போது மறுபடியும் அவர்களிடம்,(11) "விதுரர் உங்களை (மனத்தால்) உச்சிமோந்து {தலையை முகர்ந்து} அணைத்து, 'உங்களுக்கு நன்மை தரும் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும்போது, எக்காரணம் கொண்டும் கவனக்குறைவுடன் இருந்துவிடக்கூடாது' என்றும் சொன்னார்" என்றான்.(12) இவ்வார்த்தைகளை அந்த இளவரசர்களுக்குச் சொன்ன விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், அந்த மனிதர்களில் காளைகளைத் தனது படகில் கங்கையின் அக்கரைக்கு அழைத்துச் சென்றான்.(13) அப்படி நீரின் மேல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் பாதுகாப்பாக அக்கரையில் இறங்கியதைக் கண்ட அம்மனிதன் "ஜெயம் {வெற்றி}" என்ற சொல்லைச் சொன்னான். அதன்பிறகு அவர்களை விட்டகன்று, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்பிச் சென்றான்.(14)

அச்சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், அவனிடம் விதுரனுக்கான செய்தியைச் சொல்லிவிட்டு, கங்கையைக் கடந்து, கமுக்கமாகவும் வேகமாகவும் முன்னேறிச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15)

ஆதிபர்வம் பகுதி 151ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English

Sunday, July 14, 2013

மாளிகைக்கு தீயிட்டான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 150

Bhima set fire to the palace | Adi Parva - Section 150 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : மக்களுக்கு விருந்து படைத்த குந்தி; ஐந்து மகன்களுடன் அவ்வீட்டுக்கு வந்த வேடுவச்சி குடிமயக்கத்தில் உணர்விழந்து உறங்கியது; மாளிகைக்குத் தீயிட்ட பீமன்; சகோதரர்களையும், தாயையும் தூக்கிக் கொண்டு ஓடிய பீமன்...

Bhima set fire to the palace
Adi Parva - Section 150 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் மகிழ்ச்சியுடனும் ஐயத்திற்கிடமில்லாமலும், முழுமையாக ஒரு வருடம் வாழ்ந்ததைக் கண்ட புரோசனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.(1) புரோசனன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்ட குந்தியின் அறம்சார்ந்த மைந்தன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், மற்றும் இரட்டையர்களிடம் (நகுலன் மற்றும் சகாதேவனிடம்),(2) "கொடும் இதயம் கொண்ட அந்தப் பாவி நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறான். நாம் தப்பிச் செல்வதற்குத் தகுந்த காலம் வந்ததென நான் நினைக்கிறேன்.(3) ஆயுதச் சாலைக்கு நெருப்பு மூட்டிப் புரோசனனை எரித்துக் கொன்று, அவனது உடலை அங்கே விட்டு, நாம் அறுவரும் யாரும் அறியாமல் தப்பிச் சென்றுவிடலாம்" என்று சொன்னான்".(4)

Adi Parva - Section 150 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கொடை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்த போது, குந்தி, ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவு கொடுத்தாள். அங்கே பல பெண்களும் வந்து உண்டும், குடித்தும், அவர்கள் விருப்பப்பட்டவாறு மகிழ்ந்திருந்தனர். பிறகு அவர்கள் குந்தியிடம் அனுமதி பெற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.(5,6) ஐந்து மகன்களுக்குத் தாயான ஒரு நிஷாதப் பெண்பமணி {வேடுவப் பெண்மணி}, தன் பயணத்தின்போது, உணவு பெற விரும்பியும், விதியால் உந்தப்பட்டும், தனது மகன்கள் அனைவரையும் அந்த விருந்துக்கு அழைத்து வந்தாள்.(7) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளும் அவளது மகன்களும் அவர்கள் உண்டிருந்த மதுவினால் போதை கொண்டு நிலை தடுமாறி இருந்தனர். அந்த மாளிகையில் அந்தப் பெண் தனது மகன்களுடன் உணர்விழந்து பிணம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த மாளிகையில் வசித்தவர்கள் அனைவரும் படுத்தவுடன், அங்கே அந்த இரவில் பயங்கரமான பெருங்காற்று வீசியது.(8,9)

அப்போது பீமன், அந்த வீட்டில் புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் தீயை மூட்டினான். அதன்பிறகு அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டினான்.(10) அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான். அந்த வீட்டின் பல இடங்களில் தீப்பற்றியதைக் கண்டு மனநிறைவு கொண்ட பிறகு,(11) அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பாண்டுவின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} தங்கள் நேரத்தை வீணாக்காமல் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த நெருப்பின் வெப்பமும், உறுமலும் உக்கிரமடைந்து அந்நகர மக்களை எழுப்பியது. வீடு எரிவதைக் கண்ட அந்த நகரத்துக் குடிமக்கள் கவலை நிறைந்த முகங்களுடன்,(12,13) "அந்தத் தீய ஆன்மா கொண்ட பாவி (புரோசனன்), துரியோதனனின் கட்டளையின் பேரில், தனது முதலாளியின் உறவினர்கள் அழிவுக்காகவே இவ்வீட்டைக் கட்டியிருக்கிறான். நிச்சயமாக அவனே இதற்குத் தீ மூட்டியிருக்கிறான். ச்சீ... ச்சீ.. எவ்வளவு வஞ்சனை கொண்ட இதயத்தைப் பெற்றவனாக இருந்திருக்கிறான் இந்தத் திருதராஷ்டிரன்.(14) பாவங்களற்ற பாண்டுவின் வாரிசுகளை எதிரிகளாகக் கருதி, அவன்தான் அவர்களை எரித்துவிட்டான்!(15) ஐயமடையாதவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த அப்பாவி இளவரசர்களை, எரித்த தீய ஆன்மா கொண்ட அந்தப் பாவியையும் (புரோசனனையும்), விதி எரித்துக் கொன்றுவிட்டது" என்றனர்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "வாரணாவதத்தின் குடிமக்கள் இப்படி (பாண்டவர்களின் விதியை நினைத்து) ஒப்பாரி வைத்தழுது, அன்று இரவு முழுவதும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.(17) இருப்பினும், பாண்டவர்கள் தங்கள் தாயை அழைத்துக் கொண்டு அந்தச் சுரங்க வழியிலிருந்து வெளிவந்து, யாரும் அறியாத வண்ணம் விரைவாக ஓடினர்.(18) ஆனால், தூக்கக் கலக்கத்தாலும், பயத்தாலும் தங்கள் தாயுடனிருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.(19)

ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பயங்கரமான ஆற்றலும், துரிதமான இயக்கமும் கொண்ட பீமசேனன், அந்த இருளில் தனது சகோதரர்கள் அனைவரையும், தனது தாயையும் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.(20) அவன், தனது தாயைத் தோளிலும், இரட்டையர்களைத் தனது பக்கங்களிலும் {இடுப்பிலும்}, யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான். பெரும் சக்தியும், பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட விருகோதரன், எதிர்பட்ட மரங்களைத் தனது மார்பால் ஒடித்துக் கொண்டும், பூமியைத் தனது பாதச்சுவடுகளால் ஆழமாகத் துளைத்துக் கொண்டும் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(21,22)ஆதிபர்வம் பகுதி 150ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English

சுரங்கப்பணி தொடங்கியது - ஆதிபர்வம் பகுதி 149

Passage work started | Adi Parva - Section 149 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 7)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த விதுரனின் நண்பன் கனகன்; சுரங்கத்தைத் தோண்டி, அதன் வாயிலை வீட்டின் மத்தியில் அமைத்த கனகன்...

Passage work started 
Adi Parva - Section 149 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுரங்கம் தோண்டுவதில் நிபுணரான விதுரனின் நண்பர் {கனகன் என்ற}[1] ஒருவர் பாண்டவர்களைக் கமுக்கமாகச் சந்தித்து,(1) "நான் விதுரரால் அனுப்பப்பட்டவன். சுரங்கம் தோண்டுவதில் நான் நிபுணன். பாண்டவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.(2) என்னிடம் இருக்கும் நம்பிக்கையால் விதுரர் என்னிடம், "நீ பாண்டவர்களிடம் சென்று அவர்களுக்கு நன்மை செய்வாயாக" என்றார். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?(3) தேய்பிறையின் பதினான்காவது நாள் இரவில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி} புரோசனன் இந்த வீட்டின் கதவுகளுக்குத் தீ வைப்பான்.(4) மனிதர்களில் புலியான பாண்டவர்களை அவர்களது தாயுடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்பது தீய மனம் படைத்த திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனன்} விருப்பமாகும்.(5) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, விதுரர் மிலேச்ச மொழியில் உம்மிடம் ஏதோ சொல்ல, நீரும் அதே மொழியில் மறுமொழி கூறியிருக்கிறீர். இக்குறிப்புகளை நீர் என்னை நம்புவதற்காகவே தெரிவிக்கிறேன்" என்றார்.(6)

[1] கும்பகோணம் பதிப்பில் "கனகன்" என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. கனகன் என்றால் சுரங்கம் செய்பவன் என்பது பொருள்.


யுதிஷ்டிரன் சொன்ன உபாயம் - ஆதிபர்வம் பகுதி 148

The option chose by Yuthishthira | Adi Parva - Section 148 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : வாரணாவதத்திற்குள் நுழைந்த பாண்டவர்கள்; பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு இட்டுச் சென்ற புரோசனன்; மாளிகையின் தன்மையை அறிந்து கொண்ட யுதிஷ்டிரன்; சுரங்கம் தோண்ட வேண்டும் என்று பீமனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...

The option chose by Yuthishthira
Adi Parva - Section 148 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் வருகையைக் கேள்விப்பட்ட (வாரணாவதத்தின்) குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, வேகமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் வாரணாவதத்தைவிட்டு வெளியே வந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பல வகைப் பரிசுப் பொருட்களுடன் அவர்கள் வந்தனர்.(1,2) வாரணாவதத்தின் மக்கள், குந்தி மைந்தர்களை அணுகி, "ஜெயம்" என்ற வார்த்தையைச் சொல்லி, அவர்களைச் சூழ்ந்து நின்றனர்.(3) இப்படி மக்களால் சூழப்பட்ட மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியை {இந்திரன்} போலப் பிரகாசமாக இருந்தான்.(4) அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாவமற்றவர்கள், குடிமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு, மக்கள்தொகை நிறைந்ததும், அலங்காரமானதுமான அந்த வாரணாவதத்துக்குள் நுழைந்தனர்.(5)

Wednesday, July 10, 2013

விதுரரின் பிதற்றல் மொழி - ஆதிபர்வம் பகுதி 147

Vidura spoke in mlechha tongue | Adi Parva - Section 147 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : தொடர்ந்து வந்த நகர மக்களைத் திருப்பி அனுப்பிய யுதிஷ்டிரன்; மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனிடம் பேசிய விதுரன்...

Vidura spoke in mlechha tongueAdi Parva - Section 147 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "அதேவேளையில் பாண்டவர்கள் காற்றின் வேகத்தில் செல்லக்கூடிய நல்ல குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் ஏறினர். தேர்களில் ஏறுவதற்கு முன்னர், பெரும் துயரத்துடன் பீஷ்மர், மன்னன் திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த துரோணர், கிருபர், விதுரன் மற்றும் குரு குல மூத்தவர்களின் பாதங்களை அவர்கள் தொட்டனர்.(1,2) மூத்தவர்களை மரியாதையுடன் வணங்கிச் சிறுவர்களையும் தங்களுக்குச் சமமாக வாரியணைத்து, அரசகுல மகளிர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, அவர்களை மரியாதையுடன் வலம் வந்து, நாட்டின் குடிமக்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் நோன்புகளின் மீது முழு மனம் வைத்து வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3,4) பெரும் ஞானமுள்ள விதுரனும், குரு குலத்தின் காளைகளான மற்றவர்களும் மற்றும் குடிமக்கள் அனைவரும் பெரும் துயர் கொண்டு, குரு குலத்தின் புலிகளான அவர்களைச் சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர்.(5)

Tuesday, July 09, 2013

புரோசனனிடம் பேசிய துரியோதனன் - ஆதிபர்வம் பகுதி 146

Duryodhana spoke to Purochana | Adi Parva - Section 146 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : புரோசனனை அழைத்து அரக்கு வீட்டைக் கட்டும்படி பணித்த துரியோதனன்; விரைவாக வாரணாவதம் சென்று துரியோதன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்த புரோசனன்...

Duryodhana spoke to PurochanaAdi Parva - Section 146 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களிடம் இப்படிக்கேட்டுக் கொண்டதைக் கேட்ட தீய துரியோதனன், பெரும் மனநிறைவு கொண்டான்.(1)

அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தில் காளையே, அவன் {துரியோதனன்} தனது அமைச்சனான புரோசனனைத் தனிமையில் அழைத்து, அவனது வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு,(2) “ஓ! புரோசனா, செல்வம் நிரம்பிய இந்த முழு உலகும் எனதே. ஆனால் எனக்கு இணையாகவே அஃது உனக்கும் சொந்தமாகும். எனவே, அதைக் காப்பது உனது கடமையாகும்.(3) உன்னை விட நம்பிக்கைக்குரிய அமைச்சர் எனக்கு வேறு யாரும் இல்லை. எனவே, ஓ! ஐயா, எனது ஆலோசனைகளைக் காத்து {ரகசியமாக வைத்துக் கொண்டு}, எனது எதிரிகளை உனது புத்திசாலித்தனமான வழிமுறைகளால் நீ அழிக்க வேண்டும். நான் சொல்வதைப் போலச் செய்வாயாக.(4,5)

Monday, July 08, 2013

வாரணாவதம் கிளம்பினர் பாண்டவர்கள் - ஆதிபர்வம் பகுதி 145

Pandava's set for Varanavata | Adi Parva - Section 145 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவையும், அதனை அழகையும் வர்ணித்த அமைச்சர்கள்; பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரனன் அவர்களை அங்கே சென்றுவரச் சொன்னது; பாண்டவர்களை வாழ்த்திய பெரியவர்கள்; வாரணாவதம் புறப்பட்ட பாண்டவர்கள்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இளவரசன் துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து, மக்களுக்குச் செல்வங்களும், மரியாதைகளும் கொடுத்து அவன் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தான்.(1) அதே நேரத்தில், திருதராஷ்டிரனால் உத்தரவுகள் கொடுக்கப்பட்ட சில புத்திசாலி சபை அங்கத்தினர்கள் {அமைச்சர்கள்}, ஒரு நாள், வாரணாவதம் என்ற நகரத்தின் அழகைப்பற்றி வர்ணிக்கத் தொடங்கினர்.(2) அவர்கள், "வாரணாவதத்தில் வரவிருக்கும் பசுபதி (சிவன்) திருவிழாவைப் பற்றிக் கூறினர். அத்திருவிழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் பெரியதும்,(3) அதன் நிகழ்வு உலகத்திலேயே மிக உற்சாகமானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நகரம், பார்வையாளர்களின் இதயங்களையும் வசீகரிக்கிறது" என்றனர். இவ்வாறே திருதராஷ்டிரனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த அமைச்சர்கள் அந்நகரத்தைக் {வாரணாவதத்தைக்} குறித்துப் பேசினர்.(4) அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இனிமையான நகரத்திற்குச் செல்ல பாண்டவர்களும் விரும்பினர்.(5)

பாண்டவர்களை வாரணாவதம் அனுப்புங்கள் - ஆதிபர்வம் பகுதி 144

Let Pandava's go Varanavata | Adi Parva - Section 144 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டிய துரியோதனன்; அதிலுள்ள பாதகங்களை எடுத்துக்கூரிய திருதராஷ்டிரன்; சாதகங்களை எடுத்துச் சொன்ன துரியோதனன்....

Let Pandava's go Varanavata 
Adi Parva - Section 144 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது கண்களைப் போன்ற ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், கணிகர் சொன்னதை நினைத்துப் பார்த்தும், துயரடைந்ததால், அவனது மனம் {நன்மைக்கும் தீமைக்குமாக} ஆட்டம் கண்டது. பிறகு துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி,(1,2) மற்றும் நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இளவரசன் துரியோதனன், திருதராஷ்டிரனிடம்,(3) “ஓ! தந்தையே, புத்திசாலித்தனமான சூழ்ச்சியால், பாண்டவர்களை வாரணாவதம் எனும் நகரத்திற்கு அனுப்புவீராக. அதன் பிறகு நாம் அவர்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை" என்றான்.(4)

Sunday, July 07, 2013

பொறாமை கொண்ட துரியோதனன்! - ஆதிபர்வம் பகுதி 143

Jealousy of Duryodhana | Adi Parva - Section 143 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : அரக்கு மாளிகை எரியூட்டப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்ன வைசம்பாயனர்; துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...

Jealousy of Duryodhana
Adi Parva - Section 143 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுபலனின் மகனும் (சகுனியும்), மன்னன் துரியோதனனும், துச்சாசனனும், கர்ணனும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து ஒரு தீய திட்டத்தை வகுத்தனர்.(1) குரு குல மன்னன் திருதராஷ்டிரனின் சம்மதத்தைப் பெற்றுக் குந்தியையும், அவளது மைந்தர்களையும் எரித்துவிட அவர்கள் தீர்மானித்தனர்.(2) ஆனால், மேலோட்டமான குறிப்புகளைக் கொண்டே இதயத்தைப் படிக்கும் வல்லமைபெற்றவனும், ஞானியுமான விதுரன், இந்தத் தீயவர்களின் வதனத்தைக் கவனித்தே அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.(3) பாண்டவர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், உண்மை அறிவும், ஞான ஆன்மாவும் கொண்டவனும், பாவங்களற்றவனுமான அந்த விதுரன், குந்தியும் அவளது மைந்தர்களும் எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top