Thursday, July 31, 2014

அத்புத நெருப்பு! - வனபர்வம் பகுதி 221

Adbhuta Fire!  | Vana Parva - Section 221 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அத்புத நெருப்பின் மகிமையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுவாகா என்ற {இங்கு குறிப்பிடப்படுவது ஆண்பால் - மற்ற பதிப்புகளில் ஸஹன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது} நெருப்பின் விருப்பமான மனைவியான முதிதை, நீரில் வாழ்பவள் ஆவாள். பூமி மற்றும் வானத்தின் பிரதிநிதியான சுவாகா, தனது மனைவியிடத்தில், அத்வந்தன் {Advanta} என்ற உயர்ந்த புனிதமான நெருப்பைப் பெற்றான். இந்த நெருப்பானவன் {அத்வந்தன்}, அனைத்து உயிரினங்களுடைய அக ஆன்மாவின் ஆட்சியாளன் எனக் கற்றறிந்த அந்தணர்களுக்கு மத்தியில் ஒரு மரபு {ஐதீகம்} உள்ளது. அவன் {அத்வந்தன்} வழிபடத்தகுந்தவன், பிரகாசமுடையவன், இங்குள்ள அனைத்து பெரும் பெரும் பூதங்களின் தலைவனுமாவான். கிரகபதி {Grihapati} என்று அழைக்கப்படும் நெருப்பானவன், அனைத்து வேள்விகளிலும் எப்போதும் வழிபடப்பட்டு, இவ்வுலகில் படைக்கப்படும் காணிக்கைகள் அனைத்தையும் தெரிவிப்பவனாவான். சுவாகாவின் பெருமைமிக்க மகனான பெரும் அத்புதன் {Adbhuta} என்ற நெருப்பு நீர்நிலைகளின் {கடலின்} ஆன்மாவாகவும், வானின் இளவரசனாகவும், பெரியன அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்.

Wednesday, July 30, 2014

அஷ்டகபாலச் சடங்குகள்! - வனபர்வம் பகுதி 220

Ashtakapala rites!  | Vana Parva - Section 220 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பரதன், பானு, பிருகத்பானு, மனு, ஆகிய நெருப்புகளின் சந்ததிகளையும், அக்னிகளுக்குள் ஏற்படும் தொடர்புகளால் விளையும் தோஷங்களை நிவர்த்தி செய்ய அஷ்டகபாலச் சடங்கு செய்வது ஆகியவற்றையும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பரதன் என்று அழைக்கப்பட்ட நெருப்பு, தவத்தின் கடும் விதிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவனது நெருப்புக்கு புஷ்டிமதி என்று மற்றொரு பெயரும் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் புஷ்டியைக் (வளர்ச்சியைக்) கொடுப்பதால் அவன் திருப்தி அடைகிறான். அதன் காரணமாகவே அவன் பரதன் (அல்லது பேணிக் காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். சிவன் என்ற பெயர் கொண்ட மற்றொரு நெருப்பானவன், சக்தி (இயற்கை சக்திகளின் தலைமை தெய்வம்) வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். துயரத்தில் சிக்கியிருக்கும் அனைத்து உயிர்களையும், துன்பங்களில் இருந்து விடுவிப்பதால் அவன் சிவன் (நல்லதைக் கொடுப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். பெரும் தவச் செல்வத்தை தபஸ் பெற்றிருந்ததால்  {தபன் என்று அழைக்கலாம்}, அதை {தவச்செல்வத்தை} அடைவதற்காகப் புரந்தரன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மகன் பிறந்தான். ஊஷ்மா என்ற இன்னொரு மகனும் பிறந்தான். இந்த நெருப்பு {ஊஷ்மா} அனைத்துப் பொருட்களின் ஆவியிலும் {vapour உஷ்ணமாக} காணப்படுகிறது. மேலும் மூன்றாவதாக மனு என்ற மகன் பிறந்தான். அவன் பிரஜாபதியாக அதிகாரம் செய்தான்.

Tuesday, July 29, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 3ஆ

ஆதிபர்வம் பகுதி 3ஆ - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

அசுரர்கள் பாரசீகத்தின் தேவர்களா? - வனபர்வம் பகுதி 219

Are asuras Persian gods?  | Vana Parva - Section 219 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அக்னிகளான உக்தன் மற்றும் தபசின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

காளையைப் பலி கொடுக்கும்
பாரசீகத்தின் {இன்றைய ஈரானின்}
முதன்மைக் கடவுள் மித்திரன்
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவன் (உக்தன்), பிரம்மனின் புகழுக்கு ஒப்பான ஒரு பக்திமிக்க மகனைப் பெற பல வருடங்களாக நீடித்த கடுந்தவத்தைச் செய்தான். காசியபர், வசிஷ்டர், பிராணனின் மகனான பிராணன், அங்கிரசின் மகனான சியவணன், சுவர்ச்சகர் ஆகிய ஐந்து புனித நெருப்புகளின் துணைகொண்டு வியாஹிருதி மந்திரங்களை உச்சரித்துப் பிரார்த்தனை செய்யப்பட்டபோது, இயக்கம் தொடர்பான (படைப்பு) கொள்கைகளுடனும் ஐந்து வெவ்வேறு வண்ணங்களும் நிறைந்த மிகவும் பிரகாசமான ஆற்றல் (சக்தி) அங்கே எழுந்தது.

சுடர் விடும் நெருப்பின் நிறத்தில் அதன் தலை இருந்தது, அதன் கரங்கள் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன. அதன் தோலும், கண்களும் தங்க நிறத்தில் இருந்தன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன் பாதங்கள் கறுமையாக இருந்தன. அதன் ஐந்து வண்ணங்களும், அந்த ஐந்து மனிதர்களின் பெரும் தவத்தின் காரணமாக அதற்குக் கொடுக்கப்பட்டன. எனவே, இந்தத் தெய்வீகமானவன் {ஐந்து வண்ணமுள்ளவன் - பிரபாவனன்}, ஐந்து மனிதர்களுக்கு உடையவனாக விவரிக்கப்படுகிறான். அவனே ஐந்து இனங்களின் {கோத்திரங்களின்} முன்னோடியாவான். 


இப்படியே பத்தாயிரம் வருடம் தவம் செய்த பிறகு, அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவன் {உக்தன்} படைப்புப் பணியைத் தொடங்கும் பொருட்டுப் பித்ருக்களுக்கு உடையதான பயங்கர நெருப்பு உற்பத்தியானது. தனது தலை மற்றும் வாயிலிருந்து அவன், வேகமாக வாழ்நாளை {ஆயுளை - உயிரை} அபகரிக்கும் பிருகத் மற்றும் ரதந்தாரா (பகல் மற்றும் இரவு) ஆகியவற்றைப் படைத்தான். சிவனைத் தனது தொப்புளிலும் {நாபியிலும்}, இந்திரனைத் தனது பலத்தில் இருந்தும், காற்று மற்றும் நெருப்பைத் தனது ஆன்மாவிலிருந்தும் படைத்தான். அவனது இரு கரங்களில் இருந்து உதத்தையும், அனுதத்தையும் படைத்தான்.

மனம், ஐம்புலன்கள் மற்றும் பிற உயிர்களையும் அவன் படைத்தான். இவற்றையெல்லாம் படைத்த அவன் {உக்தன்} பித்ருக்களின் ஐந்து மகன்களையும் படைத்தான். அவர்களில் பிரணிதி பிருகத்ரதனின் மகனாவான், பிருகத்ரதன் காசியபரின் மகனாவன். பானு சியவனனின் தெய்வமகனாவான். சௌபரன் சுவர்ச்சகனின் மகனாவான், அனுதாத்தன் பிராணனின் மகனாவான். இந்த இருபத்தைந்து பேரும் (அவனால் படைக்கப்பட்டதால்) புகழ்பெற்றவர்களாவர். தபஸ் என்பவன் வேள்விகளைத் தடுக்கும் பதினைந்து பிற தேவர்களையும் படைத்தான்.[1] அவர்கள் சுபீமன், பீமன், அதிபீமன், பீமபலன், அபலன், சுமித்ரன், மித்ரவந்தன், மித்ரசீனன், மித்ரவர்த்தனன், மித்ரதரமனனை {மித்ரதாமா} [2] மற்றும் சூரபிரவீரன், வீரன், சுவேகன், சூரவார்ச்சஸ், சூரஹந்திரி ஆகியோராவர். 

{[1] இந்து மதப் புராணங்களில் வேள்விகளை அழிக்கும் எந்தத் தேவனும் கிடையாது. அசுரர்களே அவ்வாறு செய்வர். பர்தவான் என்று மொழிபெயர்ப்பாளர் "மேற்கு நாடுகளைச் சார்ந்த பதினைந்து தேவர்கள் அல்லது அசுரர்கள்" என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்துக்களால் அசுரர்கள் என்று கண்டிக்கப்பட்டவர்களை, சரத்துஸ்தர {Zarathustra} மதத்தைப் பின்பற்றுபவர்கள் {பாரசீகர்கள் - பண்டைய ஈரானியர்கள்} தங்கள் தேவர்களாக வழிபட்டது இங்கே கவனிக்கத்தக்கது என்கிறார் கங்குலி}.

{[2} இந்த மித்ரா தேவர்களின் பெயர்கள் தொடர்பாக பார்க்கும்போது, பண்டைய பாரசீகர்களின் முதன்மைக் கடவுளுக்கு மித்ரன் என்ற பெயர் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி}

இந்தத் தேவர்கள் {அசுரர்கள்}, மூன்று வர்க்கமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வர்க்கத்தில் ஐந்து பேர் உள்ளனர். அவர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்பட்டு, சொர்க்கத்தில் நடைபெறும் தேவர்களின் வேள்விகளை அழிக்கின்றனர்; அவர்கள் {அழிவுத் தேவர்கள் [அ] அசுரர்கள்} அவர்களின் {தேவர்களின்} நோக்கங்களைக் கலங்கடித்து, அவர்களின் {தேவர்களின்} தெளிந்த நெய் காணிக்கையைக் {தானபலியைக்} கெடுக்கின்றனர். இதைத் தேவர்களுக்கு நீர்க்காணிக்கைகளைச் சுமந்து செல்லும் புனித நெருப்புகளை மீறுவதற்காக மட்டுமே இதை அவர்கள் {அசுரர்கள்} செய்கின்றனர். வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் கவனமாக இருந்தால், அவர்கள் {புரோகிதர்கள்}, அவர்களின் {அசுரர்களின்} நினைவாகத் தான பலியை வேள்விப்பீடத்திற்கு வெளியே வைக்கின்றனர். புனித நெருப்பு வைக்கப்படும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களால் {அசுரர்களால்} செல்ல முடியாது. அடியவர்களின் காணிக்கைகளைத் {தான பலிகளை} தங்கள் இறகுகள் மூலம் அவர்கள் {அசுரர்கள்} சுமந்து செல்கிறார்கள். பாடல்கள் {மந்திரங்கள்} மூலமாக அமைதிப்படுத்தப்படும்போது, அவர்கள் வேள்விச்சடங்குகளைக் கலைப்பதில்லை.

தபசின் மற்றொரு மகனான பிருகதுக்தன், பூமிக்கு சொந்தமானவன் ஆவான். அவன் இவ்வுலகில், அக்னிஹோத்திர வேள்விகள் செய்யும் பக்திமான்களால் வழிபடப்படுகிறான். தபசின் மற்றொரு மகன் ரத்நதரன் என்று அறியப்படுகிறான். அவனது நினைவாகவே வேள்விக் காணிக்கைகள் மித்ரபிந்தனுக்கு வழங்கப்படுகிறது என்று வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் அவனைக் {ரத்னதரன்} குறித்துச் சொல்கிறார்கள். கொண்டாடப்படும் தபஸ் இப்படியே தனது மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, July 28, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 4

சபா பர்வம் பகுதி 4

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

பிருஹஸ்பதியின் நெருப்புப் பிள்ளைகள்! - வனபர்வம் பகுதி 218

The fire children of Vrihaspati!  | Vana Parva - Section 218 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிருஹஸ்பதியின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு விளக்கியது....

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதிக்குச் {பிரகஸ்பதிக்கு} சந்திரலோகத்தைச் சேர்ந்த (தாரா என்று அழைக்கப்பட்ட) ஒரு மனைவி இருந்தாள். அவள் {தாரா} மூலமாக அவருக்கு {பிருஹஸ்பதிக்கு} நெருப்பின் சக்தி கொண்ட ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். சஞ்சு {சம்யு} {1} என்ற பெயர் கொண்ட ஒரு மகன் பிருஹஸ்பதிக்கு இருந்தான். நெருப்பாக இருந்த அவன் {சம்யுவின்} மீதிருக்கும் மரியாதையால், பௌர்ணமஸ்ய மற்றும் இதர வேள்விகளில் அவனுக்கு காணிக்கையாக தெளிந்த நெய் அளிக்கப்படுகிறது. அவன் {சஞ்சு} பெரும் தவத்தகுதி கொண்டவனாக இருந்தான். சதுர்மாஸ்யம் (நான்கு மாத வேள்வி} மற்றும் அஸ்வமேத (குதிரை) வேள்விகளில், அவனுக்கே {சஞ்சுவுக்கே} முதல் மரியாதை செய்யப்படுகிறது. இந்தப் பலமிக்க நெருப்பானவன் {அக்னி} எண்ணற்ற சுடர்களால் குறிக்கப்படுகிறான். சஞ்சுவின் மனைவி சத்யை என்று அழைக்கப்பட்டாள். அவள் ஒப்பற்ற அழகு படைத்தவளாக இருந்தாள். உண்மையின் {சத்தியத்தின்} பொருட்டு அவள் தர்மத்தில் (நீதியில்) இருந்து உதித்தாள்.




அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பானவன், அவரது {பிருஹஸ்பதியின்} மகனாவான் {சஞ்சு}, அவனுக்கு {சஞ்சுவுக்குப்} பெரும் அறத்தகுதிகள் கொண்ட மூன்று மகள்களும் இருந்தனர். வேள்விக் காணிக்கைகளில் முதல் மரியாதை செய்யப்படும் நெருப்பானவனான, அவனது {சஞ்சுவின்} முதல் மகன் பரத்வாஜன் என்று அழைக்கப்பட்டான். சஞ்சுவின் இரண்டாவது மகன் பரதன் என்று அழைக்கப்பட்டான். அனைத்து முழு நிலவு நாட்களிலும் செய்யப்படும் (பௌர்ணமாஸ்ய} வேள்விகளில் (சுருவம் என்று அழைக்கப்படும்) வேள்வி அகப்பையால் நீர்க்காணிக்கையான தெளிந்த நெய் அவனுக்கு {பரதனுக்கு} மரியாதை செய்யவே காணிக்கையிடப்படுகிறது. இதைத் தவிர்த்து உள்ள மூன்று மகன்களில் அந்தப் பரதனே மூத்தவன். அந்தப் பரதனுக்கு, பரதன் என்ற {தன்} பெயரிலேயே ஒரு மகனும், பாரதி என்று அழைக்கப்பட்ட மகளும் இருந்தனர். அந்தப் பரத நெருப்பானவர், பிரஜாபதியான பரத அக்னியின் {நெருப்பின்} மகனாவார்.

ஓ! பாரதக் குலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, அவன் {பரதன்} பெரிதும் மதிக்கப்படுவதால், அவர் பெரியவன் {பாவகன்} என்று அழைக்கப்பட்டான். வீரை என்பவள் பரத்வாஜனின் மனைவியாவாள்; அவள் வீரன் என்பவனைப் பெற்றெடுத்தாள். அவன் {வீரன்} சோமனைப் போலத் தெளிந்த நெய்யால் வழிபடப்படுகிறான் என்று அந்தணர்களால் சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட தெளிந்த நெய் காணிக்கைகளில் அவன் {வீரன்} சோமனுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அவன் {வீரன்} ரதப்பிரபு, ரதத்வானன், கும்பரேதன் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் {வீரன்} தனது மனைவியான சரயு மூலம் சித்தி என்ற மகனைப் பெற்றெடுத்தான். அவன் தனது ஒளியினால் சூரியனையே மறைத்தான். நெருப்பு வேள்விக்குத் தலைமையேற்கும் மேதையாக இருப்பதால், அவன் {சித்தி} நெருப்புக் குறித்த துதிகளில் எப்போதும் குறிக்கப்படுகிறான்.

நிஸ்சயவனன் {2} {பிருஹஸ்பதியின் இரண்டாவது மகன்} என்ற நெருப்பானவன் பூமியை மட்டும் புகழ்கிறான்; அவன் புகழ், பகட்டு மற்றும் செழிப்பால் பாதிக்கப்படுவதில்லை. சுத்தமான சுடரால் ஒளிரும் பாவமற்ற நெருப்பான சத்யன் அவனது மகனாவான். இவன் சுவடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவன். பாவங்களால் இவன் தீட்டுப்படுவதில்லை. காலத்தைச் சீராக்குபவன் இவனே {சத்யனே}. அந்த நெருப்புக்கு {சத்யனுக்கு} நிஷ்கிருதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அவன் இங்கிருக்கும் அனைத்து வெளிப்படையான உயிரினங்களுக்கும் நிஷ்கிருதியை {நிவாரணத்தை} அளித்ததால் அவனுக்கு அப்பெயர் உண்டானது. சரியாக வழிபடப்படும்போது அவன் {சத்யன்} நற்பேறை அளிக்கிறான். அனைத்து நோய்களையும் உருவாக்கும் அவனது {சத்யனின்} மகன் சுவனன் என்று அழைக்கப்படுகிறான். அவனால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்கள் சத்தம் போட்டு அழுகிறார்கள். அவன் {சுவனன்} புத்திக்கூர்மையுடன் இந்த அண்ட ம் முழுவதும் உலவுகிறான். மற்றுமொரு நெருப்பு (பிருஹஸ்பதியின் மூன்றாவது மகன்), ஆன்ம ஞானம் கொண்ட மனிதர்களால் விஸ்வஜித் {3} என்று அழைக்கப்படுகிறான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிரினங்களிலும் உணவைச் செரிக்கச் செய்யும் அகவெப்பமாக அறியப்படும் அந்த நெருப்பான பிருஹஸ்பதியின் நான்காவது மகனானவன் அனைத்து உலகங்களாலும் விஸ்வபுக் {4} என்ற பெயரால் அறியப்படுகிறான். இவன் சுயக்கட்டுப்பாடு, பெரும் அறத்தகுதி கொண்ட பிரம்மச்சாரியாவான். இவன் பக வேள்விகளில் அந்தணர்களால் வழிபடப்படுகிறான். புனித நதியான கோமதி இவனது {விஸ்வபுக்கின்} மனைவியாவாள். அவள் மூலமாகவே அறமனம் கொண்ட மனிதர்கள் தங்கள் சடங்குகளைச் செய்கிறார்கள். நீரைக் குடிக்கும் பயங்கரமான கடல் நெருப்பான வடவன் {படபன்} {5} பிருஹஸ்பதியின் ஐந்தாவது மகனாவான். இந்தப் பிரம்ம நெருப்புக்கு மேல்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அவன் {வடவன்} உத்திரபாக் என்று அழைக்கப்படுகிறான். உயிர்க்காற்றாக அழைக்கப்படும் பிராணனில் அவன் அமர்ந்திருக்கிறான்.

{பிருஹஸ்பதியின்} ஆறாவது மகன் பெரும் சுவிஸ்டகிருதன் {6} என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குக் காணிக்கைகள் சுவிஷ்டமாகின்றன (சு என்றால் அற்புதமாக, இஷ்டம் என்று காணிக்கை). உதக்தாரக் காணிக்கையின் போது அவன் எப்போதும் மதிக்கப்படுகிறான். அனைத்து உயிரினங்களும் பொறுமையற்றுப் போகும்போது, மன்யௌதி {Manyauti} என்று அழைக்கப்படும் நெருப்பு பெரும் கோபத்தால் நிறைகிறது. இந்தத் தவிர்க்க முடியாத கொடூரமான மற்றும் எளிதில் மிகவும் கோபம் கொள்ளும் நெருப்பான இவள் பிருஹஸ்பதியின் மகளாவாள். சுவாகா {1} என்று அறியப்படும் இவள் அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறாள். (சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களின் ஆதிக்கத்தால் சுவாகாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்). முதல் காரணத்தால் அவள் தேவலோகத்திலும் நிகரற்ற அழகு படைத்த மகனைப் பெற்றாள். இதன் காரணமாக அவன் காம நெருப்பு என்று தேவர்களால் அழைக்கப்பட்டான். {காமன் என்பவன் காதல் தேவன் என்கிறார் கங்குலி}. (இரண்டாம் காரணத்தால்) அவள் அமோகன் அல்லது வெல்ல முடியாத நெருப்பு என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். அவன் போரில் எதிரிகளை அழிப்பவனாக இருந்தான். வெற்றியில் உறுதிகொண்டு, தனது கோபத்தைத் தடுக்கும் அவன் {அமோகன்}, வில் தாங்கியவனாகவும், தேரில் அமர்ந்தவனாகவும், மலர்மாலைகள் அணிந்தவனாகவும் காட்சி தருகிறான். (மூன்றாவது குணத்தின் செயலால்) அவள், மூன்று உக்தங்களால் புகழப்பட்டு உக்தன் (முக்தி) என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். {நமது செயல்களுக்கு அற்புதமான காரணமான உடலே உக்தம், உடலுக்கு உயிரூட்டுகிற ஆன்மா இரண்டாவது உக்தம், ஆன்மாவைத் தூண்டும் பரமாத்மா மூன்றாவது உக்தம் என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி}. இவனே {உக்தனே} பெரிய வார்த்தையை {கடவுள் என்ற பெரிய வார்த்தை என்கிறார் கங்குலி} தோற்றுவித்தவன். எனவே இவன் சமஸ்வாசன் அல்லது ஓய்வுக்கான {முக்திக்கான} வழி என்று அறியப்படுகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}. 



{ } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் பிருஹஸ்பதியின் பிள்ளைகளைக் குறிப்பதாகும்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, July 27, 2014

அங்கீரசின் மகள்கள்! - வனபர்வம் பகுதி 217

The daughters of Angiras!  | Vana Parva - Section 217 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அங்கிரசின் மகள்களின் பெயர்ப்பட்டியலை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குருகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, பிரம்மனின் மூன்றாவது மகனான அவருக்கு {அங்கிரசுக்கு} சுபை என்ற பெயரில் மனைவி இருந்தாள். அவள் {சுபை} மூலமாக அவர் {அங்கிரஸ்} பெற்ற பிள்ளைகளைக் குறித்துக் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது {அங்கிரசின்} மகனான பிருஹஸ்பதி {பிரகஸ்பதி}, புகழ்பெற்றவராகவும், பெரிய இதயம் படைத்தவராகவும், பெரும் உடல் வீரியம் பெற்றவராகவும் இருந்தார். அவரது மேதமை மற்றும் கல்வி ஆழமானதாக இருந்தது. மேலும் அவர் {பிருஹஸ்பதி} ஒரு ஆலோசகராகப் பெரிய புகழை அடைந்திருந்தார். பானுமதியே  அங்கிரஸ் பெற்ற மகள்களில் மூத்தவளாவாள். பானுமதியே அவரது {அங்கிரசின்} பிள்ளைகள் அனைவரிலும் மிகவும் அழகானவளாக இருந்தாள். ராகா [1] என்றுஅங்கிரசின் இரண்டாவது மகள் அழைக்கப்பட்டாள். எல்லா உயிரினங்களின் அன்புக்கு அவள் இலக்காக இருந்ததால், அவளுக்கு {ராகாவிற்கு} அப்பெயர் சூட்டப்பட்டது. சினீவாலி என்பவள் அங்கிரசின் மூன்றாவது மகளாவாள். ஒருநேரம் தெரிவது போலவும், ஒரு நேரம் தெரியாதது போலவும் அவள் மெலிதாக இருந்ததால், அவள் ருத்திரனின் மகளைப் போல எண்ணப்பட்டாள். ஆர்ச்சீஸ்மதி அவரது நான்காவது மகளாவாள். அவளது பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துக்காக அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. ஹவிஷ்மதி என்ற பெயரால் அவரது ஐந்தாவது மகள்  அழைக்கப்பட்டாள். அவள் ஹவிஸ்களையோ காணிக்கைகளையோ {தானபலிகளையோ} ஏற்றுக் கொண்டதால் அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. மஹிஷ்மதி என்று பக்தையான அங்கிரசின் ஆறுவது மகள்   அழைக்கப்படுகிறாள். ஓ! ஆர்வம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அங்கிரசின் ஏழாவது மகள் மஹாமதி என்ற பெயரால் அறியப்படுகிறாள். அவள் எப்போதும் பெரும் பிரகாசம் கொண்ட வேள்விகளில் இருந்தாள். ஒப்பற்றவள், பகுதி இல்லாதவள் {without portion} என்ற அழைக்கப்படும் அந்த அங்கிரசின் வழிபடத்தகுந்த மகளைக் {மஹாமதியைக்} கண்டு, ஆச்சரியமடைந்த மனிதர்கள் குஹு, குஹு என்று சொல்வதால், அவள் குஹு என்ற பெயரால் {பெயராலும்} அறியப்படுகிறாள். 




[1] இங்கே ராகா என்பது அன்பு என்ற பொருளாகும் என்கிறார் கங்குலி
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


ஆடியோ கோப்பு - சபாபர்வம் 3

சபா பர்வம் பகுதி 3

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section2.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

அக்னியும்! அங்கிரசும்!! - வனபர்வம் பகுதி 216

Agni and Angiras!  | Vana Parva - Section 216 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;

அங்கிரஸ் முனிவர்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், "பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான்? அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார்? இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ! வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான்? அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான்? அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான்? இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ! பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.



அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான்? புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார்? என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ! நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.

அந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, "இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே" என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.

முழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, "அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ! இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்" என்றார் {அங்கிரஸ்}.

அக்னி {அங்கிரஸிடம்}, "என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்" என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, "நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ! தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்" என்றார் {அங்கிரஸ்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ! மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன். 



[1] தேவர்களுக்காக வழங்கப்படும் தானங்களை அக்னியே {அ} நெருப்பே வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கங்குலி.

[2]இங்கு குமரன் என்றால் சிறுவன் என்று பொருள் என்கிறார் கங்குலி

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


வேடனிடம் விடைபெற்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 215

Kausika departed from the fowler!  | Vana Parva - Section 215 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…

வேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், "இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். "ஓ! முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ! வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்" என்றேன். அதற்கு அந்த முனிவர், "நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்" என்றார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்" என்றான் {தர்மவியாதன்}.

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 3அ | முழு மஹாபாரதம்

ஆதிபர்வம் பகுதி 3அ - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Saturday, July 26, 2014

பெற்றோரை மதிப்பதே உயரறம்! - வனபர்வம் பகுதி 214

Honouring the parents is the highest virtue!  | Vana Parva - Section 214 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, "எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், "மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்" என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது" என்றான்.

Friday, July 25, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 2 | முழு மஹாபாரதம்

சபா பர்வம் பகுதி 2

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section1.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

இல்லறத்தான் கடமை! - வனபர்வம் பகுதி 213

Duty of a House holder!  | Vana Parva - Section 213 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி, தன் பெற்றோருக்குத் தான் செய்யும் பணிவிடைகளைச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, முக்தி சம்பந்தமான இந்தப் புதிர்கள் அந்தணருக்கு விளக்கப்பட்ட போது, அவர் {அந்தணர் - கௌசிகர்}, பெரிதும் திருப்தியடைந்து, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "நீ விளக்கிய யாவையும் பகுத்தறிவு கொண்டதாக இருக்கிறது. அறப்புதிர்கள் சம்பந்தமாக உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குப் படுகிறது" என்றார். வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல பெரும் அந்தணரே {கௌசிகரே}, நான் கோரும் அனைத்து அறத்தையும், இந்த அருள்நிலையை நான் அடைந்ததற்கான காரணத்தையும் உமது கண்களால் நீர் காண்பீர். வழிபடத்தகுந்த ஐயா, எழுந்து விரைவாக இந்த உள் அறைக்குள் நுழையும். ஓ! அறம் சார்ந்த மனிதரே {கௌசிகரே}, நீர் எனது தந்தையையும், தாயையும் காண வேண்டியது முறையாகும்" என்று சொன்னான் {வேடன் தர்மவியாதன்}.

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 1 | முழுமஹாபாரதம்

என் தம்பி மனைவியான திருமதி.ஜெயலட்சுமி அருண் அவர்கள், தீபா நடராஜன் அவர்களின் ஆடியோ முயற்சியால் கவரப்பட்டு, சபா பர்வத்தைப் படிக்கிறார்கள். இருவர் படிப்பதால் ஆடியோ சீரீஸ் பணி விரைவாக நடக்கும் என நினைக்கிறேன்.

இது சபா பர்வத்தின் பகுதி 1

சபா பர்வம் பகுதி 1

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

துயரத்தைக் கடக்கும் வழி! - வனபர்வம் பகுதி 212

A way to cross grief  | Vana Parva - Section 212 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

அந்தணர் {கௌசிகர்}, "நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?" என்று விசாரித்தார்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.


Thursday, July 24, 2014

சூத்திரன் பிராமணனாகலாம்! - வனபர்வம் பகுதி 211

A Sudra may become a Brahmana  | Vana Parva - Section 211 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் இயல்புகளையும், அக்குணங்கள் கொண்டவர்களின் தன்மைகளையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த வேடன் {தர்மவியாதன்} இந்த மறைபொருள்களை விவரமாக எடுத்துக்கூறிய பிறகு, பெரும் கவனத்துடன் இருந்த அந்த அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அவனிடம் நுட்பமானவை குறித்து விசாரித்தார். அந்த அந்தணர் {கௌசிகர்}, "சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களுக்கு உரிய ஒழுக்கங்களை உள்ளது உள்ளபடி கேட்கும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "நன்றி. நீர் கேட்பதை நான் உமக்குச் சொல்கிறேன். அது அதற்கு உரிய ஒழுக்கங்களை நான் விவரிக்கிறேன், கேளும். அவற்றில் தமஸ் குணம் (ஆன்ம) மாயையால் வகைப்படுத்தப்படுகிறது. ரஜஸ் குணம் (மனிதர்களைச் செயல்படத்) தூண்டுகிறது. சத்வ குணம் பெரும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதனால் அதுவே அவற்றில் {சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களில்} பெரியது என்று சொல்லப்படுகிறது.

ஆன்ம அறியாமை, மூடத்தனம், அறிவற்ற தன்மை, கனவிலேயே லயிப்பு, செயலற்ற தன்மை, சுறுசுறுப்பற்ற தன்மை, கோபம் மற்றும் கர்வத்தால் இயக்கம் ஆகியவற்றில் ஆதிக்கத்தில் பெரிதும் மூழ்கியவன், தமஸ் குண ஆதிக்கத்தில் இருப்பவனாகச் சொல்லப்படுகிறது. ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, ஏற்புடைய பேச்சு, சிந்தனாசக்தி, பொறாமையற்ற தன்மை, ஊக்கமான செயல்பாடுகளால் பலன்களை அடைய விருப்பம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான மனிதன், ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உறுதி, அமைதி, கோபமடையாமை, துர்க்குணத்தில் இருந்து விடுதலை, தன்னல விருப்பத்தால் கனிகளை {பலன்களை} அறுப்பதற்காக {பெறுவதற்காக} செயல்படுவதில் நிபுணத்துவம் இல்லாமை {லாபம் அடைவதில் விருப்பமில்லாமை}, ஞானம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டவன் சத்வ குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சத்வ குணத்தைக் கொண்ட மனிதன், உலகப்பற்றால் ஆட்கொள்ளப்படும்போது, அவன் துயரால் பாதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அதன் {உலகப்பற்றின்} முழு விளைவையும் அறியும்போது, அவன் உலகப்பற்றை வெறுக்கிறான். பிறகு உலக விவகாரங்களில் அலட்சிய உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு அவனது கர்வம் குறைகிறது, நீதியே அதிக முக்கியமாகிறது, அவனது முரண்பட்ட அறநெறி உணர்வுகள் ஒப்புரவாகின்றன {சமரசம் ஆகின்றன}. பிறகு, எந்தக் காரியத்திலும் சுயக்கட்டுப்பாடு தேவையற்றதாகிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம். இந்தக் குணங்களை நான் உமக்கு விவரித்துவிட்டேன். நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?" என்று கேட்டான் {தர்மவியாதன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்