Adoration of Astika! | Adi Parva - Section 55 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…
ஆஸ்தீகர் சொன்னார், "பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்
[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)